மண்சரிவு அனர்த்த பகுதிகளில் 15,000 வீடுகள்

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தற்போது 15 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த குடும்பங்களை பாதுகாப்பான வலயங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு நீண்டகாலத் திட்டம் அமுல்படுத்தப்படும் என மண்சரிவு  அனர்த்த முகாமைத்துவ பிரிவு (NBRO) தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான வலயங்களில் வீடுகளை கட்டியுள்ளனர் என்று NBRO குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, வரக்காபொல, கேகாலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு NBRO விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. … Read more

எரிபொருட்களின் விலை இன்று இரவு முதல் குறைப்பு

இன்று (17) இரவு 9.00 மணி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. அமைச்சர் கஞ்சன விஜேயசேகர இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ,92 ஒக்டெயின் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவிலும், டிசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவிலும் குறைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். புதிய விலை மறுசீரமைப்புக்கு அமைய ஒக்டெயின் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 370 ரூபாவாகும், டீசல் லீட்டர் ஒன்றின் 415 ரூபாவாகும்.

கொழும்பு 4 முஸ்லிம் பெண்கள் கல்லூரி மாணவியருக்கு 'பாராளுமன்ற அறிவகம்'

இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு 4 முஸ்லிம் பெண்கள் கல்லூரி மாணவியருக்கு அண்மையில் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற சட்டவாக்க திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா பாராளுமன்ற அமர்வு தினமொன்றின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், நிர்வாகத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி ஜீ. தட்சனாராணி சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில் விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் நஸ்ரியா முனாஸ் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவியரும் கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவில் வீடுகளில் வெள்ளம்

அவுஸ்திரேலியாவில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கன மழையால் கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புறநகர்ப் … Read more

ஆயுதப் போராட்டம் வெடிக்கும் சாத்தியம்: அடித்தளத்தை தயார் செய்யப்போகும் அரசியல் முக்கியஸ்தர்..!

நாட்டின் இன்றைய நிலையில் ஆயுதப் போராட்டம் நடக்கும் எனவும், அந்தப் போராட்டத்திற்கான அடித்தளத்தை தான் தயார் செய்வதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஜனாதிபதி தலைமைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறை வேலைத்திட்டத்தை எதிர்கொண்டு மக்கள் போராட்டத்திற்கான ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளது. முறையான தலைமை இல்லாத காரணத்தினால் கடந்த முறை அரசாங்கத்தால் போராட்டத்தை அடக்க முடிந்தது. ஆனால் இம்முறை அப்படி நடக்காமல் இருக்க எனது நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் செலவழித்து … Read more

ரி 20 உலகக்கிண்ணம் – இலங்கைக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி வெற்றி

ரி20 உலக கிண்ண கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 8 ஆவது ரி 20 உலக கிண்ண போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நேற்று (16) ஆரம்பமாகியது. முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமிபியா அணிகள் களமிறங்கின. இதில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பாட்டத்jpy; MLgl;l நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 … Read more

களத்தில் மீண்டும் ராஜபக்சர்கள் – பரபரப்பாகும் அரசியல் களம்

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தீயிட்டு எரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்டத்தின் பிரதான அலுவலகம் மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாநகரசபையின் மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட பலரின் தலைமையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எரிந்த பொருட்கள் மற்றும் எரிந்த பஸ்ஸை அங்கிருந்துஅகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பி்க்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த அலுவலகம் முழுமையாக புனரமைக்கப்படும் என கூறப்படுகின்றது. குருணாகலில் கூட்டம்  அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்தக்கட்ட கூட்டம் … Read more

அத்தியாவசியமான மருந்துகளை இனங்கண்டு கொள்வதற்கு உயர்மட்ட தொழில்நுட்பக் குழு

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளில் பெருந்தொகையானவை மக்களின் பாவனைக்கு அத்தியாவசியமற்றவை என்றும், ஒரு மருந்துக்குப் பல வர்த்தக நாமங்களில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால் முறையான கட்டுப்பாடுகள் இல்லாமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. எனவே, இந்நாட்டு மக்களின் மருந்துத் தேவை மற்றும் இதனைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் யாவை என்பதை அடையாளம் காண்பதற்கு கொவிட் … Read more

கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் , நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டின் …..

கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, அஸர்பைஜான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்{ஹன் பைரமோவ் மற்றும் கஸகஸ்தான் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அடில் துர்சுனோவ் ஆகியோருடன் 2022 அக்டோபர் 13ஆந் திகதி சந்திப்புக்களில் ஈடுபட்டார். கஸகஸ்தானின் வெளிவிவகார பிரதி அமைச்சருடனான சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் … Read more