இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய முத்திரை

அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75வது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்போது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவப்படம் உள்ளிட்ட முத்திரையை இலங்கை வெளியிடவுள்ளது. இலங்கை தனது 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவப்படம் அடங்கிய நினைவு முத்திரையை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டம் ‘நமோ நமோ மாதா … Read more

“நாம் விடுதலைப் புலிகள் தலைவரின் மக்கள் தான்! முடிந்தால் சுடுங்கள் பார்ப்போம்” – பகிரங்க சவால்

“தமிழன் தமிழன் தான், நாம் எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மக்கள் தான், உங்களால் முடிந்தால் என்னை சுடுங்கள் பார்ப்போம்” என யாழில் நடைபெற்ற போராட்டத்தின் போது தாயொருவர் பொலிஸார் மற்றும் படையினரை நோக்கி பகிரங்க சவால் விடுத்து பேசியுள்ளார். மேலும் இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் நாம் இந்த இடத்தில் நின்றிருக்க மாட்டோம், நாம் எல்லாம் எவ்வளவு செல்லப்பிள்ளைகளாக வாழ்ந்தோம் தெரியுமா எனவும் தெரிவித்து மிகவும் மனம் வருந்தி தனது ஆதங்கத்தை … Read more

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு(Video)

அரச நிறுவனங்களின் சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக இருவேறு சந்தர்ப்பங்களில் சம்பளம் வழங்க திறைசேரி முடிவு செய்துள்ளது. நாட்டின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், திறைசேரியில் இருந்து பணம் விடுவிப்பதற்குத் தேவையான சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளின் சம்பளப் பணச் சீட்டுகள், உட்பட்ட தகவல்களை சமர்ப்பிக்குமாறு அரசு நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரி, கணக்காளர், இயக்குநர் (நிதி) அதிகாரிகளுக்கு திறைசேரி கடிதம் … Read more

புகையிரத சேவையில், 3,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பம்

புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பேரை  இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இந்த நாட்களில் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது அரச வேவையில் உள்ள அரசு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணிக்குழு ஊழியர்கள் மத்தியில் இருந்து 3,000 பேர் புகையிரத சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ‘சம்பளம் வழங்க வழி இல்லாததனால்இ நீண்ட காலமாக புகையிரத திணைக்களத்திற்கு ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதனால், தற்போது … Read more

2 மில்லியன் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு 02 மாத காலத்திற்கு 10 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி 40,000 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுவதாகவும், அதற்காக 61,600 மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் … Read more

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் விவாதம்

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பான விடயங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது பற்றிய இறுதித்தீர்மானம் நாளை மறுதினம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பாராளுமன்ற அலுவல்களுக்கான நிறைவேற்று குழு ஒன்றுகூடவுள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக்குழுவில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். இதன்படி குழுநிலை சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறும். அங்கு இந்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள … Read more

இலங்கையில் கடுமையாக அமுலாகவுள்ள புதிய சட்டம்

ஆண்களுக்கு ஆண்களுக்கும், பெண்களுக்கு பெண்களுக்கும் மட்டுமே மசாஜ் கடமைகளில் ஈடுபட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதால் இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையர் கூறுகிறார். ஆயுர்வேத திணைக்களத்தில் மசாஜ் நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் கட்டாயமாக இருக்க வேண்டும். … Read more

எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புத்தாண்டின் விடியலாக அமையவேண்டும் – பிரதமர்

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் தைப் பொங்கல், விவசாயத்துடனும் இயற்கையுடனும் இணைந்த பாரம்பரிய வாழ்க்கை முறையை நம்பியுள்ள எமது சகோதர தமிழ் விவசாய சமுகத்தினர் சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரியனுக்கு நன்றி செலுத்துவதைக் குறிக்கிறது. தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ள தைப் பொங்கல் பண்டிகை, அமைதி, ஒற்றுமை, கருணை ஆகிய விழுமியங்களை உள்ளடக்கி, விவசாயப் பொருளாதார மறுமலர்ச்சியை மையமாகக் கொண்டு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய புத்தெழுச்சிக்கான செயற்திறமான எண்ணக்கருவுக்கு … Read more

ஓமான் சுரக்ஷா இல்லத்தில் இருந்த மேலும் 14 பெண்கள் நாட்டிற்கு…

ஓமான் நாட்டிற்கு தொழிலுக்காக சென்று, அங்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட மேலும் 14 பெண்கள், ஓமான் இலங்கை தூதரகத்தின் சுரக்ஷா இல்லத்தில் இருந்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் இன்று (16) அதிகாலை 5 மணியளவில் ஓமான் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து ருடு206 என்ற இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 7 பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளனர் , 7 பேர் … Read more

10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த பிச்சை எடுக்க நேரிடும்-மைத்திரி ஆதங்கம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த கொழும்பு புறக்கோட்டையில் உள்ள போதி மரத்திற்கு எதிரில் டின் ஒன்றை குலுக்கி பிச்சை எடுக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிட்டம்புவை நகரில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார் . நான் பொருளாதார பலம் கொண்டவன் அல்ல 10 கோடி ரூபா … Read more