வனசீவராசிகள் திணைக்களத்திற்கு கடந்த வருடம் தண்டப்பணம் மூலம் 70 இலட்சம் ரூபா வருமானம்

வனசீவராசிகள் திணைக்களம் கடந்த 2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட தண்டப்பணம் ஊடாக 70 இலட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது என்று கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு நபர்களால் வனங்களுக்கு மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படுத்திய சேதங்களுக்கு வழக்குத் தொடர்ந்து அதன் ஊடாக பெறப்பட்ட அபராதத் தொகைகளின் ஊடாக இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வனசீவராசிகள் திணைக்களம் மொத்தமாக 1421 மில்லியன் ரூபாய் … Read more

மேலதிக வகுப்புக்களுக்கு நாளை முதல் தடை

உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் நாளை (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சையுடன் தொடர்புடைய கையேடுகளை விநியோகித்தல், விரிவுரைகள் மற்றும்; கருத்தரங்குகள் நடாத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக தகவல் இருந்தால் பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற உடனடி தொலை பேசி , 0112 785212 அல்லது 119 என்ற … Read more

2023 தளபதிகள் கிண்ண படகோட்டல் போட்டியில் இந்திய கடற்படை அணி வெற்றி

திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திர அக்கடமியினால் 2023 ஜனவரி 09 முதல் 11 வரை நடத்தப்பட்ட  5 நாடுகளுக்கிடையிலான தளபதிகள் கிண்ண படகுசவாரிப் போட்டியில் எழிமலை இந்திய கடற்படை அக்கடமியின் அதிகாரி ஒருவரையும் மூன்று இளம் கடற்படை வீர்ர்களையும் கொண்ட படகோட்டல் அணியினர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். 2.    இப்போட்டியின் வெற்றியாளர்கள் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் 2023 தளபதிகள் கிண்ணமும் அவரால் வழங்கப்பட்டது. இதேவேளை 2023 ஜனவரி … Read more

சீதாவாக்கை “ஒடிஸ்ஸி” ரயில் சேவை ஆரம்பம்

போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்திற்கு அமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான பிரதேசமாக சீதாவக்கையை மாற்றும் நோக்கில், ‘சீதாவாக்கை ஒடிஸி’ என்ற சொகுசு சுற்றுலா ரயில் சேவை நேற்று (15) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பமானது. கொழும்பு கோட்டையில் இருந்து வக நோக்கி இந்த ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் அந்த பிரதேசத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்காக மேல் மாகாண … Read more

<span class="follow-up">NEW</span> கொழும்பில் தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு! பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு (Video)

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதிக்கு விரைவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  முதலாம் இணைப்பு கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்னும் சற்று நேரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வசந்த முதலிகேவை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், மக்கள் வாழக்கூடிய சுமூகமான நிலையை ஏற்படுத்த கோரியும் இந்த ஆர்ப்படம் மேற்கொள்ளப்படவுள்ளது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு … Read more

நீண்ட தூர விமான பயணிகளுக்கு முகக்கவசம் அவசியம்

நீண்ட தூரம் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிவது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந் தொற்றானது பல வகைகளாக உருமாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில், கடந்த 7 ஆம் திகதி வரையிலான அறிக்கையின்படி, 27.6 சதவீதம் மக்கள் கொரோனாவின் எக்ஸ்.பி.பி.1.5 என்ற உருமாறிய அதிதீவிர பரவல் தன்மை கொண்ட … Read more

நகர அபிவிருத்தி ,வீடமைப்பு அதிகார சபை, மென்பந்து கிரிக்கெட் போட்டி

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி நாரஹேன்பிட்டி ஷாலிகா மைதானத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்றது. இந்த போட்டிக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண அலுவலகங்கள் மற்றும் அதிகார சபையின் பல்வேறு திணைக்களங்களின் ஏராளமான விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அங்கு வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு பிரிவின் விளையாட்டு வீர, … Read more

தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனேடிய பிரதமர்

கனேடிய தமிழ் மக்கள் மற்றும் உலக தமிழ் மக்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்தினை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை பொங்கல் திருநாளன்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். Sending my warmest wishes to Tamil communities across the country and around the world who are celebrating the beginning of Thai Pongal today – I hope … Read more

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் தைப் பொங்கல், விவசாயத்துடனும் இயற்கையுடனும் இணைந்த பாரம்பரிய வாழ்க்கை முறையை நம்பியுள்ள எமது சகோதர தமிழ் விவசாய சமுகத்தினர் சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரியனுக்கு நன்றி செலுத்துவதைக் குறிக்கிறது. தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ள தைப் பொங்கல் பண்டிகை, அமைதி, ஒற்றுமை, கருணை ஆகிய விழுமியங்களை உள்ளடக்கி, விவசாயப் பொருளாதார மறுமலர்ச்சியை மையமாகக் கொண்டு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய புத்தெழுச்சிக்கான செயற்திறமான எண்ணக்கருவுக்கு … Read more

யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பு

யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்புயாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பு – யாழ் ஆயர் உள்ளிட்ட மதத் தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அரச தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கடந்த (15) காலை யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாராதிபதி வணக்கத்துக்குரிய மீகஹஜந்துரே … Read more