இலங்கையில் ,கொவிட் தொற்றுக்குள்ளானோரின் அறிக்கை 20.12.2022
இலங்கையில் ,கொவிட் தொற்றுக்குள்ளானோரின் அறிக்கை 20.12.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் ,கொவிட் தொற்றுக்குள்ளானோரின் அறிக்கை 20.12.2022
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக்கான ஒப்புதல், 2023 ஜனவரிக்கு அப்பால் செல்லக்கூடும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஜனவரியில் ஒப்புதல் வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறப்பட்டாலும், IMF இன் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல் மேலும் தாமதமாகலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அனுமதியைப் பெறுவதற்கான அதிகபட்ச முயற்சி எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சபையின் அனுமதியைப் பெறுவதற்கான அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக … Read more
நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை சந்திக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp … Read more
சீனாவில் கோவிட் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கன கட்டுப்பாடுகள் சீனாவில் நீக்கப்பட்டதை அடுத்து அங்கு தொற்று பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. இது, சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ஆபத்தான புதிய கோவிட் வைரஸ் பரவ ஆரம்பித்தால் மாத்திரமே 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என கருத்து வெளியிட்டுள்ள நிபுணர்கள் அதற்கான … Read more
அறிவே மூலதனமாக மாறும் உலகில் ஊடகவியலாளர்களுக்கு அகநிலை மற்றும் பிற சமூக , பொருளாதார, கலாசார விடயங்கள் தொடர்பில் அதிக அறிவைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போது சமூகத்தை புத்திதெளிவைக்கொண்ட மேம்பட்ட சமூகமாக ஆக்கும் ஆற்றல் ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தொழில் ரீதியிலான ஊடக கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதற்காக சகல ஊடகவியலாளர்களும் அறிவில், ஆற்றலில் மற்றும் எண்ணக்கரு என்ற ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் … Read more
பாடசாலையில் ஊடகக் கழகத்தினை உருவாக்குவதற்காக நடாத்தப்படும் ஒரு நாள் கருத்தரங்கு ஊடகத்துறையில் நன்றாக அறிவூட்டப்பட்ட பல்துறை மற்றும் முனைப்பான மாணவர் சமூகத்தினை உருவாக்கும் நோக்கில் கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் 2005/08ம் ஆண்டு வகுப்பினர் ஒன்றிணைந்து அமைத்துக் கொண்ட REAL ECCIANS அமைப்பினால் கல்லூரியில் பலமான ஊடகக் கழகமொன்றினை அமைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் ஊடக கருத்தரங்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ம் திகதி சனிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தெல்தோட்டை ஊடக … Read more
இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணம் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை கட்டாயமாக திருத்தியமைக்க வேண்டும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு கொழும்பில் இன்று (21.12.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதேவேளை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Source link
தென்னைப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில் தற்போது அதிகரித்து வரும் வெள்ளை இளையான் (Whitefly) எனும் பூச்சித் தொல்லையை ஒழிப்பதற்கான செயன்முறையை நிலைபேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்பூச்சித் தொல்லை தொடர்பில் தெங்குப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரை விழிப்புணர்வூட்டும் பல்வேறு வேலைத்திட்டங்களை தெங்கு ஆராய்ச்சி … Read more
விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க ஜனாதிபதியின் விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீதித் துறை அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இச்செயலணியின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, விஷ போதைப் பொருட்கள் மற்றும் அபாயகரமான ஒளடதங்களின் பயன்பாட்டைத் … Read more