தென்னிலங்கையில் தொடரும் மர்ம கொலைகள்! கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

இரத்தினபுரி பாதையின் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் கார் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  48 வயதுடைய மினுவாங்கொட கல்லொழுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  சடலம் மீட்பு பாணந்துறை -இரத்தினபுரி வீதியில் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் அடையாளந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் ஒருவர் இங்கிரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு … Read more

தாமரை கோபுரத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! அனுமதி தொடர்பில் வெளியான தகவல்

சுற்றுலா அமைச்சினால் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் இணைந்து “கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்னும் தலைப்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாமரை கோபுர வாகன தரிப்பிடத்திலே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் பங்குப்பற்றக்கூடிய வசதிகள் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பண்டிகை நிகழ்ச்சிகள் இக்காலப்பகுதியில், முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் போன்ற ஒரு உணவு அரங்கம், ஒரு விற்பனையாளர் … Read more

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் மனைவியின் வீட்டில் கொள்ளை

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனின் மனைவிக்கு சொந்தமான வீட்டை உடைத்து பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் நபரை, கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இரவு வீட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை கண்டி, வேவெல்பிட்டிய,லேடி கோடின் மாவத்தையில் (பழைய ஓடியன் தியேட்டருக்கு அருகில்) அமைந்துள்ள வீட்டை இரவு நேரத்தில் உடைத்து வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த இரண்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள், பெரிய தொலைக்காட்சி பெட்டி ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை … Read more

மே 9 தாக்குதல் சம்பவம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கு- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் கடந்த மே 9 ஆம் திகதி தாக்கி எரிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி, குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை ( ரிட் ) மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. மே 9 சம்பவங்களில் வீடுகளை இழந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, … Read more

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் கர்ப்பிணி , பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்மாப் பொதி

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்மாப் பொதி வழங்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ. ராகுலநாயகி தலைமையில் , இதுதொடர்பான நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் 376 குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்மா வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒவ்வொருவருக்கும் 400கிராம் பால்மா பொதிகள் … Read more

மூன்று நாட்களுக்கான மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு

இன்று (20) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலான 3 நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின் துண்டிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைவாக ‘A’ முதல் W’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு … Read more

3 நாட்களுக்குபாடசாலை மாணவர்களுக்கு ,மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வசதி

பாடசாலை மாணவர்கள். சிரேஷ்ட பிரஜைகளும் மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 24 ஆம் திகதி இலவசமாக பார்வையிட முடியும் என்று தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்துவதற்காக இம்மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் விசேட நிகழ்வு மற்றும் கண்காட்சிகள் இடம்பெறவுள்ளன. தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 72 வகையான பாலூட்டிகள், 65 வகையான பறவைகள், 31 வகையான ஊர்வன, 89 வகையான மீன்கள் மற்றும் 30 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. பறவைகளின் இனப்பெருக்கம் … Read more

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இணைப்பு மத்திய நிலையம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக மத்திய இணைப்பு மத்திய நிலையம் ஒன்றாக செயல்படக்கூடிய வகையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள 3 மில்லியன் இலங்கையர்களின் பங்களிப்பை நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இந்த அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு: 09. புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவுதல் … Read more

ஸ்தம்பித்த மருத்துவமனைகள்… தகன இல்லங்களில் குவியும் சடலங்கள்: செய்வதறியாது தவிக்கும் ஒரு நாடு

சீனாவில் மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், மிக மோசமான சூழலை அந்த நாடு எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 800 மில்லியன் பேர்களுக்கு பதிப்பு மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை சீனா நிவார்கள் தளர்த்தியுள்ள நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில் 800 மில்லியன் பேர்களுக்கு பதிப்பு உறுதி செய்யப்படலாம் என்ற அதிரவைக்கும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தரையில் … Read more