மின் கட்டணம் அதிகரிப்பு : ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை

மின் கட்டணம் அதிகரிப்பதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.. நேற்றைய (19) அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து கலந்துரையாட படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மொனறாகலையில் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மத்திய நிலையம் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மத்திய நிலையம் ஒன்று மொனறாகலை மாவட்டத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு சமர்ப்பித்த இடைக்கால வரவு … Read more

நுவரெலியா நகரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு: விசேட முற்றுகை

நுவரெலியா நகரத்தில் பாடசாலை மாணவர்களை போதைபொருளில் இருந்து மீட்டெடுப்பதற்காக, விசேட தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நுவரெலியா நகரத்தில் முக்கிய பாடசாலைகளின் மாணவர்களின் புத்தக பைகளும்  திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இன்று காலை இடம்பெற்ற இந்த நடவடிக்கையின் போது நுவரெலியா பொலிஸ் பிரிவின் மோப்ப நாய்களும் இதற்கு பயன்படுத்தப்பட்டன. நுவரெலியா நகரத்திற்கு ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுடனான பஸ்களும். பாடசாலை வேன்களும் பொலிசாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

முன்னாள் காதலியை அச்சுறுத்தி கப்பம் பெற்ற நபர்-வவுனியாவில் சம்பவம்

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன், யுவதி ஒருவரை அச்சுறுத்தி இரண்டு லட்சம் ரூபாயை கப்பமாக பெற்றுக்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தல் நகரசபை உறுப்பினரின் மகன் காதலித்ததாக கூறப்படும் யுவதியிடம் இந்த பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக யுவதியின் அத்தை நேற்று முன்தினம் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபர் யுவதியை காதலித்த காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் … Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்ள ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதிநிதி என்ற ரீதியில் தமது கட்சி தேர்தலுக்கு தயார் என்றும், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளுமாறு கட்சி தலைமைத்துவத்திடமிருந்து ஆலோசனை கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கமைவாக நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தயார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வேட்பு மனுக்கான குழுவை அமைத்து அதற்காக கட்சியின் பொறிமுறை செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்க … Read more

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது

கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பெருளாதாரப் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி டிசம்பர் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை தமது அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், குடும்ப … Read more

மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கவுள்ள இலங்கை மக்கள் – அடுத்த வருடத்தில் காத்திருக்கும் சிக்கல்கள்

வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டுக் கடன் முகாமைத்துவம் என்பவற்றின் அடிப்படையிலும் அடுத்த வருடத்தில் சிக்கல் நிலை உருவாகலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய நிலவரங்களை கருத்தில் கொண்டு நாட்டின் பொருளாதாரம் மீள்வதற்கு எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டில் உள்நாட்டுக் கடன்களை அரசாங்கம் செலுத்தும் நிலைமை ஒன்று இல்லை. இதனால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் … Read more

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஜனவரி 01ஆம் திகதி முதலே வரித் திருத்தங்கள் நடைமுறைக்குவரும்

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்திய உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் தொடர்பான வரித் திருத்தங்கள் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய 2023ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். சபாநாயகரின் சான்றுரைப் படுத்தலுடன் இந்தச் சட்டமூலம் 2022ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமாக இந்நாட்டின் சட்டக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இச்சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் … Read more

மக்கள் பூசணிக்காய், வெள்ளரிக்காய் மட்டும் தான் சாப்பிட முடியும்! எதிர்காலத்தில் அதுவும் கிடைக்காது என எச்சரிக்கை

மரக்கறிகளின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில் பண்டிகை காலத்தில் இந்த விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக மெனிங் வியாபார சங்கத்தின் துணைத் தலைவர் நிமல் அத்த நாயக்க தெரிவித்துள்ளார். மரக்கறி விலைகளின் இன்றைய சந்தை நிலவரம் தொடர்பில் லங்காசிறி செய்திப்பிரிவு கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது. இதன்போது அவர் மேலும் கூறுகையில், இன்று மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. நத்தார் பண்டிகை காலம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று விலைகள் உயர்ந்துள்ளன. இன்று கரட் 250 … Read more

கல்விதான் ஒரு சமூக மேம்பாட்டின் அடிப்படை – இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்

கல்விதான் ஒரு சமூக மேம்பாட்டிற்கு அடிப்படையென கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று (19) மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின்  சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜோதிராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு … Read more