இலங்கை பொருளாதாரத்திற்கு மலையக தமிழ் மக்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்கு அமைச்சரவை பாராட்டு  

இலங்கை பொருளாதாரத்திற்கு மலையக தமிழ் மக்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்கு அமைச்சரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுதொடர்பான ஆலோசனையை சமர்ப்பித்தார். இந்த மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு பெருந்தோட்டத் துறை அமைச்சு மற்றும் ஏனைய குறித்த அரச நிறுவனங்களும் இணைந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் … Read more

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்

ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி உள்ளிட்ட கொண்டாட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று முன்தினம் (18) மாலை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியைக் காண பெருந்திரளான மக்கள் இன, மத பேதமின்றி ஜனாதிபதி அலுவலக வளாகத்தைச் சுற்றி திரண்டிருந்தனர். நிகழ்ச்சியைக் காண்பதற்காக அங்கே குழுமியிருந்த மக்களிடம் ஜனாதிபதி … Read more

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்பு – ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதில் அரச அதிகாரிகள் பெரும் செல்வாக்குச் செலுத்த முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், அதற்காக அரச உத்தியோகத்தர்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கொள்ளுப்பிட்டி சமுத்திரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் 2012 ஆம் ஆண்டுக் குழுவின் வருடாந்த சிநேகபூர்வ ஒன்றுகூடலில் … Read more

புதிய கடற்படைத் தளபதி ,ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தார். இலங்கை கடற்படையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று தனது கடமைகளை ஆரம்பித்தார். புதிய கடற்படைத் தளபதி, பதவியேற்றதன் பின்னர் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்ததுடன், நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார். இதேவேளை, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் … Read more

4 தூதுவர்கள் ,2 வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவி குழுவின் அனுமதி  

நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (13) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, பிரான்சுக்கான இலங்கையின் புதிய தூதுவராக மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக நிரோஷனி மனீஷா டயஸ் அபேவிக்ரம குணசேகரவை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோன்று, சுவிட்சர்லாந்தின் … Read more

இளைஞர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு – ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தகவல்

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரச அதிகாரிகள் பெரும் செல்வாக்குச் செலுத்த முடியும். அதற்காக அரச உத்தியோகத்தர்கள் பெரும் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கொள்ளுப்பிட்டி தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் 2012 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதியின் செயலாளர் … Read more

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்  நடைமுறையில்

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். கடந்த 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இச்சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக … Read more

பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் திருமதி ஹனா சிங்கர், ஜனாதிபதியை சந்தித்தார்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் (Hanaa Singer) தனது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (19) முற்பகல் சந்தித்தார். திருமதி. ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்துகளையும் தெரிவித்தார். திருமதி. ஹனா சிங்கர், 2018 செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் இலங்கையில் ஐக்கிய … Read more