இங்கிலாந்தில் வங்கி வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிப்பு

இங்கிலாந்தில் வங்கி வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது அதிகரித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,பணவியல் கொள்கைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தைத் தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட வட்டி வீதம் 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒன்பதாவது முறையான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த வீதம் 14 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. வங்கி அதன் தரப்படுத்தப்பட்ட வீதத்தை 2.25 … Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை நிதி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இந்த தேர்தலை எந்த நேரத்திலேனும் நடாத்துவதற்கு தயாராக, தேர்தல்கள் ஆணைக்குழு பணத்தை ஒதுக்கியுள்ளதுடன், இதற்காக வேண்டி, 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தi இந்த வருடம் (2022) நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கமைய அது தொடர்பான மதிப்பீடுகள் நிதி … Read more

பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம் SMS, மின்னஞ்சல் மூலம் தகவல்

2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் , பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரங்கள் SMS மற்றும்  மின்னஞ்சல் ஊடாக இன்று (19) அறிவிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இது குறித்து தெரிவிக்கையில், தகவல்களை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் தாம் தெரிவு செய்த கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரவேசித்து ,அதற்கான பதிவுகளை மாணவர்கள்  பூரணப்படுத்த முடியும் என்று … Read more

ஏஹெடுவெவ என்ற இடத்தில் இடம்பெற்ற பரீட்சை சம்பவம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் விரைவு

ஏஹெடுவெவ என்ற இடத்தில் நேற்று (19) நடைபெற்ற தரம் 5  புலமைப்பரிசில்  பரீட்சையின் போது பாடசாலை மாணவர்கள் சிலர் எதிர்கொண்ட சிரமங்களை கண்டறிவதற்காக அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளனர். இந்த அதிகாரிகள் குழு இன்று (19) அங்கு அனுப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டு.L.M.D. தர்மசேன தெரிவித்தார். இதேவேளை புலமைப் பரீட்சை பெறுபேறுகளை ஒன்றரை மாதம் அல்லது 2 மாதங்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாளை அல்லது நாளை மறுதினம் விடை தாள்களை மதிப்பிடும் பணி … Read more

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் கொலை! அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி: ஆச்சரியமான விடயம் குறித்து வெளியான தகவல்

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி, வர்த்தகர் தினேஷை கொலை செய்ய முயற்சித்ததாக கருதப்படும் கொலையாளி, கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமஸிற்கு குறுஞ்செய்தி தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குறுஞ்செய்தி, கொலையாளியினால், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.  தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பிரையன் தோமஸின் தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட, … Read more

சேதமடைந்த பயிர்ச்செய்கைக்கு, 657 மில்லியன் ரூபா இழப்பீடு

2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையிலான பெரும் போக செய்கை காலப்பகுதியில் உற்பத்தி பாதிப்பை எதிர்நோக்கியிருந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இதற்காக 657 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக உழவு சார்ந்த மற்றும் நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய காப்புறுதி சபை Agricultural and Agrarian Insurance Board தெரிவித்துள்ளது.

அரிசிக்கான விலைக் கட்டுப்பாட்டை ,அடுத்த ஆண்டு மேற்கொள்ள முடியும் – கமத்தொழில் அமைச்சர்

அடுத்த வருடம் உலகளாவிய உணவு நெருக்கடியை சந்திக்கும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்தாலும், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு (2023) நாட்டிற்கு தேவையான அரிசி நுகர்வை நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்  என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதுள்ள நிலையில், இவ்வருடம் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்படவிருந்த நிலையில், நாட்டிலுள்ள விவசாயிகள் அதிகளவு நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தமையால், அந்த … Read more

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது – நீதி அமைச்சர்

தேர்தல் ஆணைக்குழு ஒரு சுதந்திரமான ஒரு பிரிவாகும். அதற்கு தேர்தல்களை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் (18) ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார். ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இதேவேளை தேசிய தேர்தல் ஆணைக்குழு நாளை (20) கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தம்தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தம்:

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார். அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை அடையும் சாத்தியமுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழையோ அல்லது இடியூடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடகிழக்குத் … Read more

நீர் கட்டணத்தை செலுத்த, தவறியவர்களுக்கு விசேட அறிவிப்பு

ஆறு பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை ,பாவனையாளர்களிடம் இருந்து நீர் கட்டணத்திற்காக நிலுவையாக அறவிடப்பட வேண்டியுள்ளதாக தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது. சபையின் உதவி பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில், 8 இலட்சம் நீர் பாவனையாளர்கள் கடந்த 3 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலப்பகுதிக்கான நீர் கட்டணத்தை செலுத்த தவறியிருப்பதாக தெரிவித்தார். நீர் கட்டணத்தை செலுத்த வேண்டிய பாவனையாளர்களுக்கு இதுதொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 60 … Read more