ஆஜன்டினா அணிக்கு , பிரான்ஸ் ஜனாதிபதி வாழ்த்து

2022 FIFA உலக கிண்ணத்தை வென்ற ஆஜன்டினா அணிக்கு வாழ்த்து  பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை , இறுதி போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் வீரர்களுக்கு பாரீசில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கட்டாரில்   நேற்று (18) இரவு நடைபெற்ற உலக கிண்ண இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இந்த போட்டி நிறைவுக்கு … Read more

பிரபல தமிழ் வர்த்தகர் படுகொலையை அடுத்து பொரளை மயான பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கொழும்பு – பொரளை மயானம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உடனடியாக சிசிடிவி கமராக்களை பொருத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு நேற்றைய தினம் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். தினேஸ் சாப்டர் படுகொலையின் எதிரொலி அண்மையில் பொரளை பொது மயானத்தில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஸ் சாப்டர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக இவ்வாறு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது. குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற பகுதியில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என தகவல்கள் … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் சலுகைகள்! அரசாங்கத்தின் தகவல்

புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் டியுடிபிரி அடிப்படையில் சில சலுகைகளை வழங்குவதற்கு திட்டமிட்டு அதற்காக திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைப்பு மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று (18.12.2022) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டிற்கு வெளிநாட்டு செலாவணி அதிகம் கிடைக்கும் பிரதான வழியாக வெளிநாட்டு … Read more

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரிய நியமனம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பரீட்சையில் சித்திபெறும் இருபத்தாறாயிரம் புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது இக்குழுவுக்கு மேலதிகமாக விஞ்ஞான பீடங்களில் சித்தியடைந்த மேலும் ஆறாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட உள்ளன என்றும்  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தேரர் ஒருவருக்கு பரிசாக கிடைத்த பென்ஸ் கார்

கோட்டை தேரர் ஒருவருக்கு பரிசாக பென்ஸ் கார் ஒன்று கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த தேரருக்கு நன்கொடையாளர் ஒருவர் சொகுசு பென்ஸ் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட இராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். Source link

இந்த வருடத்தில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்துக்கும் மேல்

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் வீட்டுப்பணிப் பெண்களுக்காக வேலையாட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப்படுவது நிறுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மாறாக சர்வதேச தரத்திலான உயர்தர வீட்டு பராமரிப்பு உதவியாளர்களை பணிக்கு அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் இந்த வருடத்தில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தையும் தாண்டியுள்ளது என்றும் கூறினார். ஒரு வருடத்தில் மிகக் கூடுதலான இலங்கையர்கள் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற முதல் … Read more

2022 உலகக் கிண்ண கால்பந்துபோட்டி: அர்ஜென்டினா அணி 'சாம்பியன்'

பிஃபா FIFA உலக்கிண்ண உதைப்பாந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆஜன்டினா அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. இன்று நடைபெற்ற இந்த  இறுதி போட்டியில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஜன்டினா அணிகள்  மோதின . கட்டாரின் லுசைல் (Lusail) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8.30 இற்கு போட்டி ஆரம்பமானது. போட்டி தொடங்கிய 23-ஆவது நிமிடத்தில் ஆஜன்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணித்தலைவர் மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்து … Read more