“Ocean Odyssey” சொகுசு பயணக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்…

‘ஓஷன் ஒடிஸி’ “Ocean Odyssey” என்ற சொகுசு பயணக் கப்பல் அமெரிக்காவில் இருந்து 108 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘ஓஷன் ஒடிஸி’ என்ற சொகுசு பயணக் கப்பல் அமெரிக்காவில் இருந்து 108 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் 105 மீற்றர் நீளம் கொண்டதாகும். இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும். 108 செல்வந்த அமெரிக்க … Read more

சிறிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

மறுசீரமைக்கப்பட்ட சிறிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு, இன்று நள்ளிரவில் இருந்து அமுலுக்கு வருவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதுதொடர்பாக தெரிவிக்கையில் இதன்படி சிறிய உணவுகளின் விலை 10 ரூபாவினால் குறைவடையும் என்றார். இதேவேளை, 450 கிராம் நிறை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு

இன்று (18) காலை ஆரம்பமான 2022 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். 2894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இவ்வருட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு ,சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மூன்று இலட்சத்து முப்பத்து நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு மாணவர்கள் தோற்றியிருந்தனர். பரீட்சை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12:15 மணிக்கு நிறைவடைந்ததாகவும், இதுவரை பரீட்சை முறைகேடுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் … Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தேர்தல் கேட்கப்படுவதன் காரணம் அரசியல் தேவையைத் தவிர உண்மையான தேர்தலின் தேவை ஒன்று அல்ல. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றார். புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்காக … Read more

புலமைப்பரிசில் பரீட்சை இன்று: முறைமையில் விசேட மாற்றம்

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டுகளை விட இன்று நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள்  இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இரண்டாவது வினாத்தாள் … Read more

வைத்தியர்களின் ஓய்வூதிய வயதில் மாற்றம்

வைத்தியர்கள் அவசியம் ஓய்வு பெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைத்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வைத்தியர்கள் அவசியம் ஓய்வு பெற வேண்டிய வயதெல்லை மறுசீரமைத்து  அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விசேட வைத்தியர்கள் அரச வைத்தியர்கள், பல் சிகிச்சை வைத்தியர்கள் மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய பதவிகளுக்காகும். இதில் ஓய்வூதிய வயதெல்லை 5 பிரிவுகளின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்பொழுது 63 … Read more

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் சர்வதேச உணவுத் திருவிழா 2022 இல் பங்கேற்பு

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம், வியட்நாமின் வெளியுறவு அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டு, 2022 டிசம்பர் 11 அன்று ஹா நொய் நகரில் நடைபெற்ற வருடாந்த சர்வதேச உணவுத் திருவிழாவில் பங்கேற்றது, இந்த வருடாந்த நிகழ்வின் 10வது மாநாட்டில், இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச நிறுவனங்கள், ஹா நோயில் உள்ள சர்வதேச அரச சாரா நிறுவனங்கள், வெளியுறவு அமைச்சின் மாகாண அலுவலகங்கள், மாகாண அரசுகள் மற்றும் வியட்நாமிய உணவு மற்றும் பானத் துறைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் … Read more

இலங்கையை மீண்டும் ஏமாற்றிய சர்வதேச நாணய நிதியம்

உத்தேச பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கைக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடுகளும் அமைப்புகளும் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் இலங்கைக்கான கடன்களை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்காது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய ஆதரவு நாடுகள், பாரிஸ் ஆதரவு குழுவின் நாடுகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான பிற நாடுகள் இந்த எழுத்துப்பூர்வ சான்றிதழுக்கு தங்கள் ஒப்புதலை வழங்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. … Read more