துர்க்மெனிஸ்தானின் மஜ்லிஸ் தலைவருக்கு தூதுவர் விஸ்வநாத் அபோன்சு நற்சான்றிதழை கையளிப்பு

துர்க்மெனிஸ்தானின் மஜ்லிஸ் (நாடாளுமன்றத்தின்) தலைவரிடம் (சபாநாயகர்) 2022 டிசம்பர் 08ஆந் திகதி அஷ்கபாத்தில் உள்ள மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சு தனது நற்சான்றிதழை கையளித்தார். துர்க்மெனிஸ்தான் குடியரசிற்கான இலங்கைத் தூதுவரை வரவேற்ற மஜ்லிஸ் தலைவர் குல்சாத் மம்மெடோவா, தூதுவர் விஸ்வநாத் அபோன்சுவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அவர் தொடர்ந்தும் வலுப்படுத்துவார் என நம்பிக்கை தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை மக்களின் வாழ்த்துக்களை … Read more

30 நாடுகளில்  கொலரா நோய் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் கொலரா நோய் பரவல்  ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதேவேளை உலகம் முழுவதும் கொலரா நோய்க்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கொலரா நோய்க்காக வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகளின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளமை இதற்கான மற்றொரு காரணமாகும். இதுவரை உலகின் 30 நாடுகளில் கொலரா தொற்றுநோய் பதிவாகியுள்ளது. இது வழமையான நிலையை … Read more

தெஹிவளையில், ரெயிலில் மோதி இளைஞனும் யுவதியும் உயிரிழப்பு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (17)  காலை ரெயிலில் மோதுண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்த பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த திலினி லக்ஷானி என்ற யுவதியும் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் ரந்திக என்ற இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை ரெயில் நிலையத்தை அண்மித்த கடற்கரைக்கு  சென்ற அவர்கள் புகையிரத பாதையை கடக்க முயன்ற போது மருதானையில் … Read more

செல்பி எடுக்கச் சென்ற மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

புகையிரத பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை புகையிரத பாதையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி விபத்தில் படுகாயம் அடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  தொடருந்தில் மோதுண்டு இளைஞனும் யுவதியும் பலி-தெஹிவளையில் சம்பவம்  Source link

மன்னார் வளைகுடாவில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் மேற்கு நோக்கி மெதுவாக நகரக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால், தென் தமிழ்நாட்டில் வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 45 முதல் … Read more

கடற்றொழிலாளர்களுக்கு  விசேட அறிவிப்பு

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர் 17ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அந்தப் பிராந்தியத்திற்கு மேலாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளது.அது மேற்குத் திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆழம்கூடிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் ஆழம் கூடிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 50-60 கிலோ … Read more

மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று இளைஞர் செய்த மோசமான செயல் (Video)

14 வயதான பாடசாலை மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று மரம் ஒன்றில் கட்டி வைத்து சிகப்பு எறும்பு மற்றும் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் செடியின் இலைகளை போட்டதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 17 வயதான இந்த சந்தேக நபர் சிலாபம்-பங்கெதெனிய, திகன்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை எதிர்நோக்கிய மாணவன் பங்கதெனிய-எலஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த … Read more

ஒரு தீவாக இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்-ஜனாதிபதி

ஒரு தீவு என்ற வகையில் இலங்கை, சர்வதேச உறவுகளைப் பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் சர்வதேச உலகில் இலங்கையை நல்ல நிலைக்கு உயர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இன்று (17) முற்பகல் தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியின் 97 ஆவது பயிற்சியை முடித்து வெளியேறும் கெடட் உத்தியோகத்தர்களின் பிரியாவிடை … Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – பெற்றோருக்கு விசேட அறிவிப்பு

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கடந்த ஆண்டுகளை விட நாளை நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை நாளை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும் … Read more