கிராம உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. மாவட்ட மற்றும் அமைச்சர்கள் மேன்முறையீட்டுச் சபைகளால் பரிசீலிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட, இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கான விசேட காரணங்களைக் கொண்ட அதிகாரிகளைத் தவிர்த்து, ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை நிறைவு செய்த அனைத்து … Read more

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: மூன்றாவது இடத்துக்கான போட்டி

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் குரோஷியா- மொராக்கோ அணிகள் மோதுகின்றன. தோகா, கத்தாரில் நடந்து வரும் 22 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.   இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. முன்னதாக இன்று (சனிக்கிழமை) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3ஆவது இடத்துக்கான … Read more

மஹவ சந்தியிலிருந்து வவுனியா வரையிலான ரயில் பாதையை புனரமைக்க நடவடிக்கை

வடக்கு ரயில் பாதையில் மஹவ சந்தியிலிருந்து வவுனியா வரையிலான ரயில் பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணியை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அனுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் நிரந்த விஸ்சுந்தர தெரிவித்தார். மஹவ சந்திக்கும் வவுனியாவிற்கும் இடையிலான வடக்கு ரயில் பாதையின் குறித்த பகுதி சுமார் நூறு வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை. இதனால், ரயில்கள் அடிக்கடி தண்டவாளத்தை விட்டு தடம் புரள்கிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட … Read more

சர்வதேச நிதி சந்தையில் தொடர்ந்தும் ஸ்திரமின்மை-டொலருக்கு பதிலாக மாற்று நாணயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் நாடுகள்

கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு பின்னர் சர்வதேச நிதி சந்தையில் ஏற்பட்ட நிதி ஸ்திரமின்மை தற்போதைய உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக மேலும் உக்கிரமடைந்துள்ளது. மாற்று நாணயங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ள நாடுகள் இதற்கு மத்தியில் உக்ரைன்-ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் மேற்குலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக டொலருக்கு பதிலாக மாற்று நாணயங்களை பயன்படுத்தும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது. சீனாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் அண்மையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட … Read more

கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இம்மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் 25 ஆயிரத்து 24 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரஷ்யா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஜேர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்தோர் இந்த மாதத்தில் வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களுக்கு அமைவாக ,இந்த … Read more

1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதி

100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சில் நேற்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்  இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது நாடு முழுவதும உள்ள 100 கல்வி வலயங்கள், 120 கல்வி வலயங்களாக அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். … Read more

பிரபல வர்த்தகர் மரணம்: கொந்தராத்து கொலையாளி மூலம் கொல்லப்பட்டிருக்கலாம்..! தொடரும் தீவிர விசாரணை

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் சாப்டர் கொலை தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூலம், அவர் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. தினேஷ் சாப்டர் இதனை தனது செயலாளருக்கு தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். சாப்டருக்கும் பிரையன் தோமசிற்கும் இடையில் பணக் கொடுக்கல் வாங்கலிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். திட்டமிடப்பட்டு கொலை செய்யும் பொறுப்பு எவரிடமாவது (கொந்தராத்து) ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் … Read more

துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான இளைஞர் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்

பாராளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களது   பங்கேற்புடன்  17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. 2022.10.05 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம்  இந்த குழுக்களினால் நடாத்தப்படும் ஒவ்வொரு விசாரணை  தொடர்பிலும்  குழுக்களிற்கு  உதவியளிப்பதற்காக  குழுவொன்றின் தவிசாளருக்கு  ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு முடியும் என்பதால்,  ஒவ்வொரு குழுவுக்கும் இளைஞர் பிரதிநிதிகளை … Read more

தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்கான சிரேஷ்ட அதிகாரிகளின் குழு ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் கூடியது

தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க ஆகியோரும் பங்கேற்றனர். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பிரகாரம், தேசிய கொள்கைகளை திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சபையொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் 02 உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க … Read more

எல்ல சுற்றுலா வலயம் பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

எல்ல சுற்றுலாப் வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியன இணைந்து 4 மாதங்களுக்குள் அதற்கான திட்டத்தை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் நேற்று (16) முற்பகல் நடந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். எல்ல சுற்றுலா வலயத்தை முறையாகவும், திட்டமிட்ட வகையிலும் … Read more