தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான சரியான அணுகுமுறை என்ன? – தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார் அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உருவாகியுள்ள இந்த சூழலை அனைத்து தரப்புக்களும் சரியாகப் பயன்படுத்திக்  கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்றுமுன்தினம் (13.12.2022) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் டக்ளஸ் … Read more

இருளில் மூழ்கப் போகும் இலங்கை! பாரிய அளவில் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்

அடுத்த வருடத்தில் 7 அல்லது 8 மணித்தியாலங்கள் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  அதிகரிக்கும் மின்வெட்டு தொடர்ந்தும் தெரிவிக்கையில், நிலக்கரி பிரச்சினையை தீர்ப்பதற்கு முடியாமல் போனால், எதிர்வரும் காலங்களில் நாளாந்தம் 7 அல்லது 8 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும். சுமார் 10 நிலக்கரி கப்பல்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த ஆண்டு … Read more

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்திட்டங்களுடன் இணைந்து செயற்படுமாறு ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

உணவில் தன்னிறைவுடைய நாடாக இலங்கையை அடுத்த வருடமளவில் உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து செயற்படுமாறு ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். நகர் புறங்களுக்கு அவசியமான உணவு உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் என்பவற்றை முறையாக ஒழுங்குபடுத்தும் நோக்கில் இலங்கை ஒரு கூட்டு பொறிமுறையொன்றை உருவாக்கியிருப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இப்பொறிமுறையின் கீழ் போஷனை குறைபாடு, உணவு இல்லாதவர்களுக்கு எவ்வாறு உணவை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் கவனம் … Read more

ரஷ்ய படைகளால் பெரும் நெருக்கடியில் உக்ரைன்: நிறுத்தப்பட்டுள்ள சேவைகள்

உக்ரைன் தலைநகர் கீவ்வின் பல பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை இன்று அதிகாலை நடத்தியுள்ளது. முன்னதாக ட்ரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. இந்நிலையில் இன்றைய தாக்குதலில் நகரின் உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் குடிநீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. மெட்ரோ சேவைகள் நிறுத்தம் மேலும் மெட்ரோ சேவைகள் அங்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலால் கீவ்வின் பல மத்திய மாவட்டங்களில் … Read more

ஐ.பி.எல் ஏலத்தில் 10 இலங்கை வீரர்கள்

இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கையின் 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம்; இம்மாதம் 23ஆம் திகதி கொச்சியில் நடைபெறவுள்ளது. இதில் ஆரம்பத்தில் பட்டியலிடப்பட்ட 991 வீரர்களில் இருந்து 369 வீரர்கள் ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு, அணிகளில் இருந்து 36 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 10 அணிகளுக்காகவும் மொத்தம் 405 வீரர்கள் ஏலத்தில் இடம்பெறவுள்ளனர். இவர்களில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் 4 இணை … Read more

சுற்றுலா பயணிகளுக்கு 'தியத்மா' ஓய்வு படகு சேவை ஆரம்பம்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு சேவைகள் வழங்கப்படும் வகையில் பத்தரமுல்ல, தியவன்னா ஓயாவில் “தியத்மா” ஓய்வு படகு சேவை ஆரம்பமானது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தினால் இந்தப் பொழுதுபோக்கு படகு (15.12.2022) சேவை தொடங்கப்பட்டுள்ளது. அங்கு உரையாற்றிய நகர.அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இத்தகைய பொழுதுபோக்கு சேவைகள் உள் … Read more

விடுதலைப்புலிகளின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக கூறி தெற்கில் எழுந்துள்ள எதிர்ப்பு-செய்திகளின் தொகுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணயக்கியனுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து தூதரகத்திற்கு முன்பாக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் அதிகாரப் பகிர்வின் ஊடாக அதிகாரப் பரவலாக்கல் எனும் தொனிப்பொருளிள் தெற்கில் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். சமஷ்டி தொடர்பாக தெற்கில் நிலவிவரும் பிழையான கண்ணோட்டத்தை இல்லாது செய்து, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் வகையிலேயே … Read more

பொருளாதாரச் சரிவைச் சமாளிக்க தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது.

சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான அளவில் உதவுவதிலும், இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் தகவல் தொழில்நுட்பத்துறை முக்கியப் பங்காற்றுகிறது. இதற்கான தெளிவான திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் திரு கனக ஹேரத், இலங்கை மன்றத்தில் நடைபெற்ற “லைட்டிங் டிஜிட்டல்” தேசிய மன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.  நாட்டில் டிஜிட்டல் மாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு முக்கியமான பணி என்றும், இதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA), தொழில்நுட்ப அமைச்சின் மேற்பார்வையின் கீழ்  மேற்கொள்ளும் … Read more

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட “சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்” இன்று (16) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கான பண்புரு மாற்றுத் தீர்வு, அணுகத்தக்க மற்றும் நியாயமான உலகை உருவாக்குவதற்கு சக்தியை வழங்குவதில் புத்தாக்கத்தின் வகிபாகம் எனும் தொனிப்பொருளிற்கு அமைய இந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளிற்கு அமைய டிசம்பர் மாதம் 3ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் … Read more