மலேசியாவில் நிலச்சரிவு : 16 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் தனியார் வேளாண்மை பண்ணை அருகே பலர் தங்கிருந்துள்ளனர். இந்நிலையில், இந்த வேளாண்மை பண்ணையில் இன்று (16) அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை … Read more

மின்சாரத்துறையின் மறுசீரமைப்புக்கான முன்மொழிவு

மின்சாரத்துறையின் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பில்தேசிய பேரவையின் கொள்கைத் தயாரிப்பு உபகுழுவில் கலந்துரையாடல்… மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர, இராஜாங்க … Read more

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் வெற்றிபெற அனைவரும் கட்சி, நிற வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி பதுளையில் தெரிவிப்பு

பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல்துறை கூட்டுப் பொறிமுறையின் கீழ் பதுளை மாவட்டத்துக்கான வேலைத்திட்டத்தில் நேற்று (15) இணைந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்பான அண்மைய செய்திக் கட்டுரைகள் தொடர்பான திருத்தம்

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊழியர் ஒருவர் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள பல செய்திகள் தொடர்பில் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அதிகாரியை ஓமான் அதிகாரி எனக் குறிப்பிட்டு கட்டுரைகள் மக்களை மிகவும் தவறாக வழிநடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றிற்கும் இடையிலான சிறந்த நெருங்கிய மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை கருத்தில் கொண்டு, ஊடகங்களின் தவறான குறிப்புக்களை சரிசெய்து, திருத்தங்களை சம அளவில் முக்கியத்துவத்துடன் … Read more

பொதுமக்கள் சேவையை நிறைவேற்ற தவறியமைக்காக அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென ஜனாதிபதி வலிறுயுறுத்தினார்

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென்றும் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே சட்டங்கள் மற்றும் சட்டக்கோவைகளை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பதுளை மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் … Read more

குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்துக்கு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.  சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில்  (13) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.   அதேபோன்று, புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், உயர் … Read more

நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம்! இலங்கையின் அபாய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (ஐ.எம்.எப்) எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும், எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையர்களின் நன்மைக்கும், உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு அப்பால் அடுத்த வருடம் இலங்கை சர்வதேச அமைப்புகளிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கடன்களை எதிர்பார்க்கிறது. அரச சொத்துக்களை மறுசீரமைப்பிற்கு … Read more

சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளது…

சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளது…  –வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்அமைச்சர் நலீன் பெர்னாந்து இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனத்தை இலாபகரமாக நடத்திச் செல்ல முடிந்துள்ளது. நியாயமான சந்தை அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அமைச்சினால் முடிந்திருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் … Read more

உலகக்கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள்

உலகக்கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணியும் போட்டியிடவுள்ளன. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் (14) ஆரம்பமாகிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் களமிறங்கின. அல்பேத் ஸ்டேடியத்தில் ஆரம்பமாகிய இந்த ஆட்டத்தில் 5 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர். … Read more

இலங்கையில் விருந்துகளில் நடக்கும் அதிர்ச்சி செயல் – பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்றை கடத்தல்காரர்களால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நேற்று ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். இந்த இரகசிய வேலைத்திட்டத்தின் முதல் இலக்கு பாடசாலை மாணவர்கள் என தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விருந்தில் புதிய உணவு பானங்களை பருகி பார்க்குமாறு புதிதாக வருபவர்களிடம் … Read more