“மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் “

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கான “மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் ” தொடர்பான செயலமர்வு நேற்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்கும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் நிஷா ஹரீமின் ஏற்பாட்டில் இச் செயலமர்வு இடம்பெற்றது. இச்செயலமர்வின் போது சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சேவைகளைப் … Read more

“தேசிய இளைஞர் தளம்” நாட்டின் எதிர்காலம் பற்றிய தமது நோக்கை அரசாங்கத்திற்கு முன்வைக்க இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் – ஜனாதிபதி

“தேசிய இளைஞர் தளம்” நாட்டின் எதிர்காலம் பற்றிய தமது நோக்கை அரசாங்கத்திற்கு முன்வைக்க இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கு, (National youth Platform) பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு தொடர்பில் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பூர்வாங்கத் … Read more

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் நேற்று (13) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் … Read more

குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள தாமரை கோபுரம்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் பெர்சனல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அடிக்குறிப்பை பதிவிட்ட கும்பலை திருடர்கள் என்று சொல்ல ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் முயற்சி செய்கிறார். உங்கள் வழக்கு நன்றாக நடக்கும் என்று நினைத்தோம். இன்று திருடர்களுடன் திருடர்களும் உள்ளனர். அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்புடைய … Read more

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படும் நிலையில் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்த தீர்வு என சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் குளிர் மற்றும் தூசி நிலை காரணமாக மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்,சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்புளுவன்ஸா போன்ற நோய்கள் இந்நாட்களில் பரவலாகக் காணப்படுகின்றமையினால் மாணவர்கள் சில வாரங்களுக்கு முகக்கவசம் அணிந்து பாட சாலைக்குச் செல்வது சிறந்தது. பெற்றோருக்கு … Read more

ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி:இன்றைய நாணயமாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 361.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 393.64 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 378.03 … Read more

ஆயிரக்கணக்கான கால்நடைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன! வெளியானது அறிக்கை

கடந்த நாட்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகளின் சடுதியான உயிரிழப்புக்கு குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. விலங்குகளின் இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பிக்கும்படி, விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இறப்பிற்கான … Read more

முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்:பாராளுமன்றத்தில் அதிருப்தி தெரிவிப்பு

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன மீது பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பாராளுமன்றத்தில் இன்று (13) கவலை மற்றும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாக்கப்பட்டமை பாரிய விடயமாகும். கல்வித்துறை பாரிய நெருக்கடியை நோக்கி செல்கிறது. வரலாற்றில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றதில்லை. சம்பவம் … Read more

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் இலங்கை விஜயம்

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் அழைப்பின்பேரில் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் அவர்கள் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 2022 டிசம்பர் 12 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளார்.  இந்திய கடற்படைத் தளபதி அவர்கள் கொழும்பை வந்தடைந்தபோது இலங்கை கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களால் இதயபூர்வமாக வரவேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2.    இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க, … Read more

உலக கிண்ண கால்பந்து: அரையிறுதியில் அர்ஜென்டினா-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை

2022 உலக கிண்ண கால்பந்து அரையிறுதி போட்டியில், அர்ஜென்டினா-குரோஷியா அணிகள் இன்று (13) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று (13) நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது. கடந்த உலகக் கிண்ண போட்டியில் இறுதி … Read more