மாலிகாவத்தையில் தேடுதல் : 25 பேர் கைது

மாலிகாவத்தை பொலிஸார், மருதானை, தெமட்டகொட, மாலிகாவத்தை,  கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது போதைப்பொருட்கள் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 25 பேரில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 10 பேரும் இருப்பதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது இந்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஹெரோயின், ஐஸ்,  போன்ற போதைப் பெருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. சுந்தேகநபர்கள் இன்று … Read more

பாரம்பரிய கூத்துக் கலை அண்ணாவிமார் மாநாடு

பாரம்பரிய கலையாகிய கூத்துக் கலையில் பல்துறை ஆற்றல் மற்றும் திறமை வாய்ந்தவர்களான  அண்ணாவிமார்களுக்கான மாநாடொன்றை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 14.12.2022ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30மணிக்கு மட்டக்களப்பு, பிள்ளையாரடி, தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.   இவ்வண்ணாவிமார் மாநாடு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்ஷன் தலைமையில் இடம்பெறவுள்ளது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன் அவர்களும், … Read more

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்! 10 மாணவர்கள் இடைநிறுத்தம்

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பல்கலைக்கழக மாணவர்கள் பத்துப் பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது புதல்வன் ஆகியோர் அடையாளம் தெரியாத மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்து மாணவர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் தாக்குதலில் தொடர்புடைய பத்து மாணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு அவர்கள் கற்றல் நடவடிக்கையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதி … Read more

கண்டி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லொத்தர் சபையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை வேலை வாய்ப்புக்காக வழி நடத்தும் நிகழ்ச்சி இன்று (12) கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது. இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய லொத்தர் சபையினால் இன்று அதிர்ஷ்ட இலாப  சீட்டு விற்பனை முகவர் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை சமூகமயப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், எதிர்காலத்தில் இது போன்ற பல தொழில் … Read more

பணி பகீஷ்கரிப்பை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்- வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர்

அமைச்சருடனும் நிருவாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாயின் முதலில் பணி பகீஷ்கரிப்பை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், அவ்வாறு நடந்தால் மட்டுமே கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்போம் என ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார். தபால் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டுள்ள திடீர் பணி பகிஷ்கரிப்பு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடக அமைச்சின் செயலாளர்,கடந்த ஆண்டு தபால் திணைக்களத்தின் வருமானம் 7.1 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், ஊழியர்களின் … Read more

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

சர்வதேச அல்லது அது நவீன சக்திகளால் தேசத்தை அழிக்கும் நோக்கில் பாடசாலையில் கற்கும் சிறுமிகளுக்கு ஐஸ் போதைப்பொருள் இலவசமாக வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  சமகால இலங்கை எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் ஒன்றாக பாடசாலை மாணவர்கள், குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிகளவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சம்பவம் காணப்படுகின்றது. பொலிஸ் மா அதிபரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை சர்வதேச … Read more

 டுவிட்டரில் மீண்டும் 'புளூ டிக்' வசதி

இன்று (12) முதல் டுவிட்டரில் மீண்டும் ‘புளூ டிக்’ வசதி கிடைக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரப்பூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க், டுவிட்டரில் ‘புளூ டிக்’ வசதியை பெற மாதந்தோறும் 8 … Read more

புதிய ஆண்டில் பாராளுமன்ற அமர்வு ஜனவரி 05ஆம் திகதி

# புதிய ஆண்டில் பாராளுமன்ற அமர்வு ஜனவரி 05ஆம் திகதி #புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை அன்றையதினம் நடத்த தீர்மானம் நாளையதினம் (13) நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு இன்று (12) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (12) நடைபெற்ற … Read more

பெறுமதி சேர் வரி (VAT)/ நிதிச் சேவையின் மீதான பெறுமதி சேர் வரி (VAT on FS)

09-12-2022 – அறிவித்தல் – பெறுமதி சேர் வரி (VAT)/ நிதிச் சேவையின் மீதான பெறுமதி சேர் வரி (VAT on FS)     09-12-2022 – அறிவித்தல் – சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (SSCL)    

நான்கு முக்கிய நகரங்கள் பௌதீக வள அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் ,கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை  ஆகிய நான்கு முக்கிய நகரங்கள் பௌதீக வள அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நகரங்களை இணைக்கும் வகையில் 9 பொருளாதார வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நகரின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உரிய திணைக்களங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் முக்கிய வர்த்தக மற்றும் நிதி நகரமாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையானது எதிர்வரும் 8 வருடங்களுக்கான … Read more