யாருக்கு அரசாங்க உதவி வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு விஜயம் –

யார் யாருக்கு  அரசாங்க உதவி கிடைக்கப் பெற வேண்டும் என வீடு வீடாகச் சென்று அரசாங்க அதிகாரிகளினால் ஆராய்ந்து வருவதாக   நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த  கருத்துக்களுக்கு  விளக்கமளிக்கையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். தற்போது நிவாரண உதவிகளைக் கோரி சமூக நலன்புரி அமைச்சிற்கு 34இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததுடன், அரசாங்கம்   மக்களின் நிலைமைகளை நேரில் … Read more

யாழ்ப்பாணம் ,கல்முனை, புத்தளம் மாவட்டங்களில் “டெங்கு” தீவிரம்

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 1,602 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் (390)  நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, கடந்த வாரத்தில் கல்முனை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, … Read more

8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகப்படுத்தப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு

2023ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு, 8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்கும் என்றும், இந்த வளர்ச்சியைத் தயாரிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு  தரம் 10 இல் பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கான … Read more

அமைச்சர்களை நியமித்துள்ள கோட்டாபய! மாற்றும் வாய்ப்பு ரணிலுக்கு

 தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையே காணப்படுகிறது. எதிர்காலத்தில் அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணினால் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது  என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,  எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ எமக்கு அதிகாரம் கிடையாது. தேர்தல் ஆணைக்குழுவும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுமே தேர்தல் தொடர்பான தீர்மானங்களை … Read more

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு கோரல் அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் ஏற்கனவே அரசாங்கத்தை தவிர எதிர்க்கட்சிகள், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் அதிக அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றன. இதற்காக அண்மையில் எதிர்க்கட்சிகள், தேர்தல்கள் ஆணையாளரையும் சந்தித்து வலியுறுத்தலை விடுத்திருந்தன. உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் 20க்கு … Read more

அமெரிக்கா செல்வதற்கு அந்தரிக்கும் கோட்டாபய!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்கப் குடியுரிமையை இரத்துச் செய்ததால் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் செல்ல முடியாமல் இப்போது அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு வழியில் அமெரிக்கா சென்று விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் கோட்டாபய அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக அல்லது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகச் செல்வதற்கு விருப்பம் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஜனாதிபதியிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சுற்றுலா … Read more

கால நிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரித்தானியாவிடமிருந்து ஒத்துழைப்பு.

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக இலங்கை எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டுவதாகவும் அதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான ஒத்துழைப்புகளை வழங்க பிரித்தானியா எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென்றும் இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வென்ஸ்டால் (Lisa Whanstall) தெரிவித்தார். காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் … Read more