இலங்கையர்களை சுற்றுலா வீசாவில் மலேசியாவிற்கு அனுப்பும் மோசடி அம்பலம்

இலங்கையர்களை சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி அம்பலமாகியுள்ளது. இந்த மோசடியை நடத்தும் நபர்களை கைது செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. புலனாய்வுப்பிரிவினர் விசாரணை மலேசியாவிற்கு விஜயம் செய்து வந்த 14 பேர் கொண்ட இலங்கையர்களில் நேற்று (1) கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, ​​அவர்களில் ஒன்பது பேர் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வேலைக்குச் செல்ல முயன்றுள்ளதாகவும் அதில் நான்கு பெண்களும், 5 … Read more

முன்னாள் நீதவானுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்

காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் டி.எஸ்.மெரிஞ்சி ஆராச்சி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தலா 5 ஆண்டுகள் என 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மதுவரி குற்றத்திற்காக அறவிடப்படும் அபராத தொகை குறைவாக பதிவு செய்தன் மூலம் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக தொடரப்பட்டுள்ள இரண்டு வழக்குகளை நீண்டகாலம் விசாரித்த மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தவிர்த்து வந்த குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தவிர்த்து … Read more

விபத்தில் இறந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகள்-பொறுப்பேற்க எவருமில்லை

காலி உணவட்டுன மஹாரம்ப தொடருந்து கடவையில் ரஜரட்ட ரஜின தொடருந்தில் முச்சக்கர வண்டி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழந்த நிலையில், தனித்து போயுள்ள அவரது நான்கு வயது மகள் நேற்றிரவு வரை முன்பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனித்து போயுள்ள பிள்ளையை பொறுப்பேற்க எவருமில்லை ரஷ்ய பெண் இந்த குழந்தையுடன் உணவட்டுன பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர்களின் உறவினர்கள் எவரும் இலங்கையில் இல்லை என்பதுடன் ரஷ்ய தூதரகத்தின் … Read more

புதிய இராணுவ பிரதம அதிகாரி நியமிக்கப்பட்டார்

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நேற்று (29) பிற்பகல் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடமிருந்து இராணுவத்தின் 61 வது பிரதம அதிகாரியாக நியமனம் கடிதத்தை பெற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் வீரசூரிய தனது 36 வருட இராணுவ சேவையில் இலங்கை இராணுவத்தில் தொண்டர் படையின் கட்டளைத் தளபதி உட்பட பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். அவர் இலங்கை இலகு காலாட்படை மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட … Read more

பணவீக்கம் 2022 நவெம்பரில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதத்திலும் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 66.0 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 61.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 85.6 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 73.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த, அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 56.3 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 54.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2022 ஒத்தோபரில் அவதானிக்கப்பட்ட கொழும்பு … Read more

அதிகரிக்கப்படும் மின் கட்டணம்: இலங்கை மின்சார சபை அதிரடி அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதி இல்லாவிட்டாலும் கூட மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது சாத்தியம் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபை, மேற்படி விலையேற்றத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு  சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது. மின் கட்டணங்கள் அதிகரிப்பு  இதன்படி, மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள் தற்போது … Read more

2023 வருடத்தில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த அறிக்கையில்

2023 வருடத்தில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த அறிக்கையில் முன்வைக்கப்படும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தேசிய பேரவை உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் வருமானமான 3500 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வது தொடர்பான முன்மொழிவை இரண்டாவது அறிக்கையில் முன்வைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற … Read more

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கடன் மீளப்பெறுதல் நவம்பர் மாதத்தில் 300 மில்லியனைத் தாண்டியுள்ளது..

⏩ தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கடன் மீளப்பெறுதல் நவம்பர் மாதத்தில் 300 மில்லியனைத் தாண்டியுள்ளது… ⏩ அடுத்த வருடமும் வருமானத்தை அதிகரிக்க திட்டங்கள் தயார்… ⏩ எதிர்காலத்தில் டொலருக்கு வீடுகளை விற்கும் திட்டம்…   தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக அதன் தலைவர் திரு.ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி … Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று (02) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் ,இது தொடர்பான விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் .WWW.ugc.ac.lk  இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

இலங்கை இராணுவத்திடமிருந்து ஜனாதிபதிக்கு சிறப்புப் பை (Attaché Case).

ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case) இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களால் இந்த சிறப்புப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது.   உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் போது முக்கியமான மற்றும் இரகசியமான ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பையை (Attaché Case) பயன்படுத்துவது மரபாகும். … Read more