ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ காஸ் நிறுவனம் நடவடிக்கை

இன்று முதல் நாடளாவிய ரீதியில் ,ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ காஸ் இலங்கை நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லையென லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நான்காயிரம் மெற்றிக் தொன் காஸை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் நாட்டை வந்தடையும். 34 ஆயிரம் மெற்றிக் தொன் காஸிற்கான கட்டளை முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவது கப்பலே இலங்கை கடற்பறப்பை நெருங்கியிருப்தாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் பண்டிகைக் … Read more

தீவிரமாக பரவும் மற்றுமொரு நோய் தொற்று! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கோவிட் தொற்று பரவும் நிலையில், மறுபுறம் எலிக்காய்ச்சல் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் எலிக்காய்ச்சல் குறித்த அவதானம் மக்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது.  எலிக்காய்ச்சல்  மழையுடனான வானிலை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் … Read more

இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டம்

இந்தியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்த காலங்களில் எமது நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்களை மாற்றுவது பாரிய சவாலாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனைக் கருத்தில் கொண்டு குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேசைகளை அதிகரிப்பது குறித்து இந்தியாவுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், … Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் அங்கவீனமுற்றவர்களுக்கு மாவட்ட அமைப்பு  

அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (01) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அங்கவீனமுற்ற நபர்களுக்கான அமைப்பினை மாவட்ட மட்டத்தில் நிறுவும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றுவலுவுள்ளோா் அமைப்பின் அங்கத்தவர்களை உள்ளடக்கி யாப்பின் விளக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வின் இறுதி நாள் கலாச்சார … Read more

மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா! வெளியான முக்கிய அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு முரண்பாடாக கருத்துக்களை முன்வைத்து வந்தன. இது தொடர்பான விளக்கத்தை வழங்க இன்றைய ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மின்கட்டணத் திருத்த பொறிமுறையொன்று அவசியம்  … Read more

கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் எட்டாவது நாள் இன்று (01). கல்வி, பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ,பாராளுமன்றத்தைப் போன்று ஏனைய துறைகளுக்குமான பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். பெருந்தோட்டத்துறையில் … Read more

ஜனவரி மாதம் உயர்தர பரீட்சை:மின்துண்டிப்பு குறித்து கல்வி அமைச்சர்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் ,அக்காலப்பகுதியில் மின்துண்டிப்பு மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மின்கட்டணம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,இது தொடர்பில் நெகிழ்வுத்தன்மை கடைபிடிக்கப்படுவதன் அவசியத்தை அமைச்சரவை மற்றும் மின்சார சபையிடம் முன்வைக்கயிருப்பதாகவும் கல்வி மேலும் தெரிவித்தார். புதிய ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்  … Read more

சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க நடவடிக்கை

டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கைக எதிர்பார்த்துள்ளது. இதனால் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். இதுவரையில் , ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான ஹோட்டல்களில், முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத் … Read more

போலி முத்திரை பதிவுகளை , பயன்படுத்தி பெண்களை ஓமான் நாட்டுக்கு அனுப்ப முயன்ற பெண் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின், போலி முத்திரை பதிவுகளை  பயன்படுத்தி ,பெண்களை ஓமானுக்கு அனுப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யும் போது கடவுச்சீட்டில் ஒட்டப்படும் முத்திரையை போலியான முறையில் பயன்படுத்தி ஓமானுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, கொழும்பு ஆட்டுப்பெட்டித் … Read more

வருமான வரி தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு (Live)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ஆம் திகதி முதல் மேலதிகமாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். விசேட அறிக்கை நாடாளுமன்றில் இன்றைய தினம் வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன், குறித்த காலப்பகுதியில் எவ்வித அபராதமும் அறவிடப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Source link