அரச ஊழியர்களின் வசதியான சீருடை குறித்த சுற்றறிக்கை

அரச ஊழியர்கள் ,வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக , பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ. கே. மாயாதுன்னே வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 

அரசியல் தீர்வினை அடையும் வழியும் பொறிமுறையும் எம்மிடம் இல்லை! ருசாமி சுரேந்திரன்

“சமஷ்டி முறைதான் எமது அரசியல் தீர்வு என்பதில் தமிழ்த் தேசியத் தரப்பினரிடம் தெளிவும் உறுதியும் உள்ளன. ஆனால், அதை அடையும் வழியும் பொறிமுறையும் எம்மிடம் இல்லை. அதை வகுப்பது மிக அவசியம்” என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.  இவ்வி்டயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,  நிரந்தரமான அரசியல் தீர்வு “நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக தமிழர்கள் பல காலமாக வெவ்வேறு வழிகளில் போராடி வருகின்றோம். மாறி வரும் அரசாங்கங்களோடு பேச்சு நடத்தி … Read more

இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று (30) இந்த போட்டி நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ,முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Ibrahim Zadran, 4 சிக்ஸர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 162 … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த காணிகளை அடையாளங்காண ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) முற்பகல் நடைபெற்றது. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் தொடக்கம் மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசத்தில், அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் … Read more

இந்திய எதிர்நோக்கவுள்ள கொடூர வெப்ப அலை: ஆண்டுக்கு 20 கோடி பேர் பாதிக்கப்படுவர்

இந்தியாவில் 2030 ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 20 கோடி பேர் வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அனர்தம் குறித்து குறிப்பிட்டுள்ளது. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்துவரும் நிலையிலேயே இந்த அனர்த்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: * 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் … Read more

அரச சார்பற்ற நிறுவன பிரதானிகளின் சொத்து விபரங்கள் குறித்த விசாரணை..! வெளியான தகவல்

அரச சார்பற்ற நிறுவன பிரதானிகளின் சொத்து விபரங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் புதிய உத்தேச சட்டமொன்றை தயாரித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் இலங்கையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர்கள் தங்களது சொத்து விபரங்களை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 7இல் பாரிய வீடுகள் சில அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்களுக்கு கொழும்பு 7இல் பாரிய வீடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. … Read more

சதொச வில் ,நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ,நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக புதிய விலைகள் பின்வருமாறு சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை – ரூ. 199 கீரி சம்பா 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுபுதிய விலை – ரூ. 225 பெரிய வெங்காயம் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுபுதிய விலை – ரூ. 225 நெத்தலி 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுபுதிய விலை – ரூ. 1150

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (30) முற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். கிடைக்கப்பெறும் வளங்களை திறம்பட பயன்படுத்தி அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எழுந்துள்ள பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தியசாலையின் … Read more

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப்பார்க்க தமிழ் மக்கள் தயார் இல்லை!மைத்திரியின் கருத்துக்கு டக்ளஸ் பதிலடி

பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை என்றும், தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக்கூடாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று நாடாளுமன்றில் தெரிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் … Read more