ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சிநேகபூர்வ கிரிக்கட் போட்டியில் கோல்டன் ஃப்ளாஷஸ் அணிக்கு வெற்றி

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரி மற்றும் விளையாட்டுப் பிரிவினால் நடாத்தப்பட்ட சிநேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 27ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவை மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ஊடகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எடிட்டோரியல் செலஞ்சர்ஸ், எட்வான்ஸ் பவர், ஃபயர் போல்ஸ், டிஜிட்டல் நோமேட்ஸ், மொன்ஸ்டர்ஸ், கோல்டன் ஃப்ளாஷஸ், பெட்டிங் டீவாஸ் (பெண்கள்) மற்றும் பொம் ஸ்கொட் (பெண்கள்) ஆகிய 8 அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. போட்டியில் கோல்டன் ஃப்ளாஷஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய போக்குவரத்து பிரிவு … Read more

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடி!

பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பணத்தினை பெற்றுவிட்டு பல மாதங்களாகியும் குறித்த பெண், முறைப்பாடு பதிவு செய்தவரை கனடாவிற்கு அனுப்பாமலும், பெற்றுக்கொண்ட பணத்தினையும் மீள வழங்காமலும் இருந்த காரணத்தினால் இவ்வாறு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மூன்றாவது முறைப்பாடு குறித்த பெண் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தங்களிடம் 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து … Read more

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இந்நாட்டிற்கான ஒழுக்கத்துக்கு ஏற்ற வகையில் இடம்பெற வேண்டும்…

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இந்நாட்டிற்கான ஒழுக்கத்துக்கு ஏற்ற வகையில் இடம்பெற வேண்டும்… சர்வமத பிரதிநிதிகள் தேசிய பேரவை உபகுழுவில் சுட்டிக்காட்டு இந்நாட்டில் கூடிய வருமானம் பெறும் 20% இல் 12 % ஆனவர்களுக்கு சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரணங்கள் கிடைக்கின்றன நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 20% இல் உண்மையான நிவாரணங்களைப் பெறுவர்கள் 49% ஆனவர்கள் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளை நாட்டில் பின்பற்றப்படும் ஒழுக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் … Read more

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவி நிலை கட்டளைத் தளபதி நியமனம்

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (COS) நேற்று (29.11.2022) நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மஹாநாம கல்லூரியின் மாணவரான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 1986 இல் இராணுவத்தில் அதிகாரியாக இணைந்தார் மற்றும் இலங்கை இராணுவத்தின் மிகவும் மரியாதைக்குரிய காலாட்படை படைப்பிரிவுகளில் ஒன்றான இலங்கை லைட் காலாட்படையின் 1 வது படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். விருதுகள்  ஒவ்வொரு துறையிலும் படைப்பிரிவு நியமனங்களைத் தவிர, மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கட்டளை மற்றும் பணியாளர்களின் … Read more

உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் சர்வதேசத்தை ஈர்த்த இலங்கை தமிழ் இளைஞன்

இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் இளைஞன் ஒருவர் செயற்பட்டுள்ளார். கட்டாரில் உலகளாவிய ரீதியிலுள்ள காற்பந்தாட்ட ரகசியர்கள் குவிந்துள்ள நிலையில், அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார். கட்டாரில் … Read more

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வழங்கிய பதிலடி

பராபவ சூத்திரம் தர்மத்தையே அன்றி, தேரர் சங்கம் குறித்து போதிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்று (29.11.2022) உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் இன்று சமய விவகார, பௌத்த சாசன விவகாரம் குறித்து பேசப்படும் சந்தர்ப்பத்தில் எனக்கு பராபவ சூத்திரத்தைக் கற்பித்த எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் அறிந்த வகையில், பராபவ சூத்திரத்தில், தேரர் சங்கங்கள் குறித்து குறிப்பிடவில்லை. பௌத்தத்தில் போதிக்கப்படும் தர்மம் பௌத்தத்தில் … Read more

மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் சீனா இணக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு கணிசமானளவு மண்ணெண்ணை தேவைப்படுகின்றமையினால், மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் சீனா முன்வர வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் சீனாவிடம் இருந்து வழங்கப்பட்ட 90 இலட்சம் லீற்றர் டீசலை சம்பிரதாயபூர்வமாக பெற்றுக்கொள்ளும் நிகழ்வின் போதே டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், “குறித்த தொழில் நடவடிக்கைகளுக்கு மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கைக்கான சீனத் … Read more

வடக்கிலிருந்து சிங்களவர்கள் வெளியேறியமைக்கு காரணம் இதுவே! சரத் வீரசேகர பகிரங்க குற்றச்சாட்டு

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழ் மக்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறே நினைவு கூர்ந்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய போதே சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும்.நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன. பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 … Read more

கொமாண்டோ படையணியின் 372 புதிய சிப்பாய்களின் அடிப்படை பயிற்சி நிறைவு

கமாண்டோ படையணியின் 50 எ,பி,சி,டி,ஈ மற்றும் எப் தொகுதிகளில் மொத்தம் 06 அதிகாரிகள் மற்றும் 366 சிப்பாய்கள் இறுதியாக குடாஓயா கமாண்டோ படையணியின் பயிற்சிப் பாடசாலையில் 18 மாதங்கள் தொடர்ந்து கடுமையான பயிற்சியைப் பெற்றனர். மேலும் அவர்களின் விடுகை அணிநடை சனிக்கிழமை (26) இடம்பெற்றது. தேசத்திற்கு ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் கமாண்டோ படையணியின் விடுகை அணிநடைக்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் … Read more