இறக்குமதி தடை தொடர்பில் வெளியான தகவல்! செய்திகளின் தொகுப்பு

பல பொருட்களுக்கான இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பிரேக் பேட்கள் ஆகியவை இதனுள் அடங்கும். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட HS குறியீடுகளால் வகைப்படுத்தப்பட்ட சில பொருட்களின் இறக்குமதி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் முன் அனுமதிக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை … Read more

டிஜிடல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி

ஒவ்வொரு பிரஜைக்கும் டிஜிடல் அடையாள அட்டையை வழங்கும் நிகழ்ச்சி அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யுனிக் அடையாள அட்டை என்ற பெயரில் 15வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் டிஜிடல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும், இந்நிகழ்ச்சித் திட்டம் தொழில்நுட்ப அமைச்சின் கீழ், அடுத்த ஆண்டில் பாரிய நிகழ்ச்சித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தொழில் நுட்ப அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, அரசாங்கத்தின் சேவைகள் பலவற்றை … Read more

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவேந்தல் உரை – ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (24) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் உரை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்துகொண்டார்.. ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவம், மகா விகாரையின் இலங்கை ராமன்ய மஹா நிகாயாவின் அனுநாயக்க மினுவாங்கொட பத்தடுவன பிக்கு பயிற்சி நிலையத்தின் வண. நெதகமுவே விஜய மைத்திரி தேரர் … Read more

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபர் உயிரிழப்பு! மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை (Video)

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது, அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் … Read more

ஊவா மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர்25ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓய்வூதிய சம்பளம் கிடைப்பதில்லை – மத்திய வங்கி ஆளுநர்

தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் 25 இலட்சம் ரூபா மாதாந்த சம்பளத்தை பெறுவதாகவும், இதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்திலும் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதாகவும் சமீபத்தில் அரசியல்வாதிகள் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தனர். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மைக்கு புறம்பானது என்று முற்றாக நிராகரித்தார். நேற்று (24) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ,இதுதொடர்பாக அவர் மேலும் தொவிக்கையில், தாம் பொறுப்புடன் கூறுவது என்வெனில் முதலாவதாக … Read more

மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி வலியுறுத்தல்

மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரி முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நேற்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more

இலங்கையில் பெண்களின் பெயரில் உலாவும் ஆண்கள்

இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  பெண்களின் பெயரில் ஆண்கள் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக ஊடகங்களில் பல போலி கணக்குகள் உலாவருகின்றன.  பெண்களின் பெயரில் பல ஆண்களின் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல, ஆண்களின் பெயரில் பல பெண்களின் கணக்குகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.  இதனால், எந்த சந்தர்ப்பத்திலும் சமூக வலைத்தளங்கள் … Read more

இலங்கையின் தேசிய அடையாள அட்டையில் மாற்றம்

இலங்கை பிரஜை ஒருவரை அடையாளம் காணும் வகையில், சர்வதேச தரத்துக்கமைய தேசிய அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது. இலங்கைப் பிரஜை ஒருவரை நம்பத்தகுந்த வகையில் அடையாளம் காண்பதற்காக 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமக்களின் சுய விபரங்கள், அவர்களின் உயிரியல் பண்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது. அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பின்னர், தேசிய தனிநபர் பதிவேட்டை மத்திய தரவு அமைப்பாக நிறுவுவதற்கும் இதன் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். … Read more

கொழும்பில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள பல வைத்தியசாலைகள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  இந்த நிறுவனங்களிடமிருந்து சபைக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 400 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சு, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு பல் வைத்தியசாலை, கொழும்பு கண் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, தேசிய இரத்த மாற்று நிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து இந்தத் தொகை … Read more