பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 05.10.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 05.10.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 05.10.2022
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழப்புவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து உலக வங்கி பாராட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் நேற்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாலத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos கருத்து தெரிவிக்கையில், வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். உலக வங்கி இந்த நிலைமையை … Read more
வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 25வது ஆண்டு நினைவாக லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்துடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சு 2022 அக்டோபர் 04ஆந் திகதி நிகழ்வொன்றை லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வுக்கு தெற்காசிய பொருளாதார மாதிரியாக்க வலையமைப்பு மற்றும் இன்ரீச் குளோபல் ஆகியன ஆதரவளித்தன. இந்நிகழ்ச்சியில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்ட வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற்ற … Read more
அரசியல் யாப்பை பாதுகாப்பது சமகால அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடக அமைச்சருமான, அமைச்சரவை பேச்சாளருமான, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாடு நிலைத்திருப்பதற்காக மூன்று நிறுவனங்கள் இருப்பதாகவும் தெரிவித்த அவர் அரசியல் யாப்பு, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை என்ற 3 ஆகும். இந்த 3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் மீது அழுத்தம் அல்லது … Read more
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62.36 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 36 இலட்சத்து 55 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 39 ஆயிரத்து 415 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், கொரோனா பாதிப்பில் … Read more
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, எலபாத, அயகம, … Read more
இலங்கையில் (04.10.2022),கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்று பொதி ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு மானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேனீர் மற்றும் அப்பம் போன்றவற்றின் விலை உயர்த்தப்படாது என அவரமேலும் தெரிவித்துள்ளார். Source link
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனியில் இடம்பெற்றுவரும் போராட்டத்தை களைப்பதற்காகவே பொலிஸார் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தொழிற்சங்கத்தினர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் இணைந்து இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு – கண்டி பிரதான வீதியை இடைமறித்து களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னதாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு தடையாக செயற்பட்டமையினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் … Read more