IMF ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் -பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் குறித்த உடன்படிக்கை தொடர்பான விபரங்கள்  உரிய குழுக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில்  தெரிவித்தார். இன்றைய (4) பாராளுமன்ற அமர்வின் போது  சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.  சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னரான நகல் ஒப்பந்தம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதற்கு முன்னர் சர்வதேச நாணய  நிதியம் … Read more

சர்வதேச திறந்த கராத்தே முதன்மைப்போட்டியில் வாழைச்சேனை இந்துக்கலூரி சாதனை

இலங்கைக்கான சர்வதேச தற்காப்புக் கலைச் சங்கம் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து சிறுவர் தினத்தில் நடாத்திய போட்டியில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) யைச்சேர்ந்த 13 மாணவர்கள் ஜப்பான் கராத்தே – தோசோட்டோகான் பயிற்சிக் கழகத்தின் (JKSSA) சார்பாக கலந்துகொண்டனர். இப்போட்டியில் காத்தா(Kata))மற்றும் சண்டை(Kumite)ஆகிய இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு அதிகூடிய 18 பதக்கங்களை தம் வசப்படுத்திக்கொண்டனர். இதில், சண்டை போட்டிகளில் கலந்து கொண்ட ந.நியோகிறிஸ்மன், ம.மனோஷ், பா.யுனித், சு.மதுர்ஷினி,சு.டென்சிக்கா ஆகியோர் எட்டு தங்கப்பதக்கங்களையும் ச.நோயல் றிதுஷன்,உ.கேசோபன், … Read more

பெரும்போக சோளப் பயிர்ச்செய்கைக்காக உர விநியோகம்

பெரும்போகத்தில் சோளப் பயிர்ச்செய்கைக்காக, 3 மாவட்டங்களுக்குத் தேவையான 175,000 மெற்றிக் டொன் யூரியா உரம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மொனராகலை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான உர விநியோகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சின் அறிவுறுத்தலின்படி, கொமர்ஷல் உர நிறுவனம் இந்த உர விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், எஞ்சியுள்ள உரம் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப விநியோகிக்கப்படவுள்ளது.

ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டி: இந்திய, ஐக்கிய அரபு அமீரக அணிகள்

ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டியில் இன்று (04) ஐக்கிய அரபு அமீரக அணிக்கும், இந்திய பெண்கள் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது. ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்று உள்ள இந்தத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நேற்று (03) மலேசியா அணியை எதிர்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற மலேசிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பாட்டத்தில் இந்திய … Read more

மாணவர்களின் பாடப்புத்தகங்களின் சுமை குறைக்கப்படும்

கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடப்புத்தகங்களின் நிறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.   இங்கு அவர் தெடர்ந்தும் உரையாற்றுகையில்… ‘கல்வி சீர்திருத்தத்தின், முன்னோடி திட்டமாக மாதிரி பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு ஒரு தொகை நிதி; ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அது முழுமையாக செயல்படுத்தப்படும்.   அடுத்த முறை வேறு புத்தகம் வெளிவரும். கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பாடப்புத்தகங்களின் நிறை நிச்சயமாக குறையும். … Read more

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தீ அணைப்பு பயிற்சி

  முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்குதீ அணைக்கும் பயிற்சி முகாம்நேற்றைய தினம் (03) மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலக உற்பத்தித் திறன் மேம்பாட்டு பிரிவினரின் ஏற்பாட்டில் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீ அனர்த்தங்கள், முன்னாயத்த முன்னெச்சரிக்கை செயற்பாடுகள், தீ அனர்த்த கருவிகளின் வகைகள், அவற்றினை கையாளும் முறைமைகள், அனர்த்த அபாய ஒலி, அலுவலக அனர்த்த ஒன்றுகூடல் இடம், அவசர வழி கையாளுகை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு செயல்முறை ரீதியான ஒத்திகை பயிற்சியும் … Read more

எரிபொருள் விநியோகம் தடையின்றி இடம்பெறும் : கஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகம் எந்தவித தடையும் இன்றி இடம்பெறும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலம் குழப்பமடைய வேண்டாம் என்று பொதுமக்களிடம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

2022.10.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2022.10.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்   (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.) 01. ‘உணவுக் கொள்கைக் குழுவை’ நிறுவுதல்   உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தல் போன்ற தீர்மானங்களை எட்டுப்போது கிராமிய மட்டத்திலிருந்து மேல்மட்டத்தை நோக்கிய மூலோபாயத்தை பின்பற்றி கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் பல் – துறைசார் பொறிமுறையொன்று அரசாங்கத்தால் அண்மையில் … Read more

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்கொடுப்பனவுக்கு தேயிலை சபை இணக்கம்

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் தொடர்பில் இலங்கை தேயிலை சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடன் அடிப்படையில் தேவையான வசதிகளை வழங்குவதற்கு தேயிலை சபை இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார … Read more