மீனவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40கிலோ மீற்றர் வரை … Read more

மின்சாரம், உரிபொருள் ,வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்மானி அறிவிப்பு

மின்சாரம் வழங்கல் பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிபபு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட் வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு ஆகிய அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதினதியின் உத்தரவுக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி … Read more

கால நிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி மற்றும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்கள் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ … Read more

இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் உணவுகள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்கள் உட்கொள்ளும் உணவு முறையான தரத்தில் இல்லாமையினால் அதிகளவானோர் தொற்றாத நோய்களுக்கு உள்ளாவதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவித்துள்ளார். உணவுக்கு உரிய தர நிர்ணயம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் நிலந்த லியனகே இதனை குறி்பபிட்டுள்ளார். உணவில் நச்சுப் பொருள் “இலங்கையில் பெரும்பாலும் இந்த தொற்றாத நோய்களைப் பற்றிப் பேசும்போது உணவுதான் முதன்மையானது.உணவினால் ஏற்படும் … Read more

யானைகள் சரணாலய கழிவுகள் மூலம் Biogas உயிர்வாயு

பின்னவல யானைகள் சரணாலயத்தில் அகற்றப்படும் கழிவுகளை பயன்படுத்தி பாரிய அளவிலான உயிர்வாய்Biogas வை தயாரிப்பதற்கு தேவையான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான ருவான் விஜேவர்தன பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு விஜயம் செய்தார். பின்னவல யானைகள் சரணாலயத்தில் நாளாந்தம் சுமார் 5 தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது. இதனைக்கொண்டு உயிர்வாயுவை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக தேவையான காலநிலை சௌபாக்கிய திட்டத்தை தயாரிப்பதற்காக இலங்கைக்கு … Read more

ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட்: இந்தியா – மலேசியா அணிகள் இன்று மோதல்

7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டித் தொடர் பங்களாதேஷில் நடக்கின்றது. இத்தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி – பங்களாதேஷ் அணியையும், இந்திய அணி – மலேசியா  அணியையும் எதிர்கொள்கிறது. போட்டித் தொடரில்  இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. மலேசியா அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா : 3,011 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 97 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 301 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே … Read more

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டி நாளை

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ரி20 போட்டி நாளை (04) நடைபெறவுள்ளது. இந்திய சுற்றுப்பயணத்தில் ஈடுப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ரி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இவ் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி குவஹாத்தியில் நேற்று (02) இடம்பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாப்பிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு … Read more

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி வழங்கும் வேலைத்திட்டம் ஆயிரம் பாடசாலைகளில் இன்று (03) தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். மாணவர்களின் மந்த போசாக்கு நிலைமைக்கு தீர்வாக 2 ஆயிரம் சமூக வைத்திய சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி மேலும் தெரிவித்தார்.