நள்ளிரவு முதல் பெற்றோல் விலை ரூ.40வினால் குறைக்கப்படும்

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவினால் குறைவடையவுள்ளது. ஒன்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவினால் குறைவடையும். ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை … Read more

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக , பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் நிலக்கரியை கொண்டு வரும் சில கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. இதன்படி, மின் துண்டிக்கப்படும் நேரத்தை அதிகரிப்பதற்கான தேவை ஏற்பாடாது. இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது. இதேவேளை அடுத்த வருடத்திற்கு தேவையான 25 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரிக்கான விலைமனு கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த … Read more

'மஹநுவர ஒடெசி' விசேட சுற்றுலா புகையிரதம் இன்று ஆரம்பம்

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரைக்கும் பயணிக்கும் ‘மஹநுவர ஒடெசி’ சொகுசு சுற்றுலா புகையிரதம் இன்று (01) முற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்களின் தலைமையில் கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது. இந்த சொகுசு விசேட புகையிரதம் தலதா மாளிகையை தரிசிப்பதற்கும் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவைப் பார்வையிடுவதற்கும் வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், அநுராதபுரம் புனித பூமியை … Read more

சேமலாப பயன்களுக்கான விண்ணப்பங்கள்: ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிப்பு

சேமலாப பயன்களை பெறுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நேற்று (30) திஅகதியுடன் நிறைவடைய இருந்தது. சமுர்த்தி நிவாரண நிதி உதவி பெறுவோர்  , முதியோர், சிறுநீரக நோய்க்கான உதவி பெறுவோர், ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள் உதவி வழங்கும் அனைத்து பயனாளிகள் சேமலாப பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் பயன்களை எதிர்பார்த்துள்ள … Read more

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்

]கடற்றொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டமும், புதிய காப்புறுதி திட்டமும் அறிமுகப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீர் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த காவத்த தெரிவித்துள்ளார். கடற்றொழில் சமூகத்தை அண்டி வாழ்வோரின்; மனநிலையை மேம்படுத்துவதற்காக அவர்களின் பிள்ளைகளின் ஆற்றலுக்கான வேலைத்திட்டம் என்ற தொனிப்பொருளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். கடற்றொழிலாளர்கள் மாதாந்த கொடுப்பனவை பெறுபவர்கள் அல்ல இதனால் இவர்கள் தங்களது உழைப்பில் கிடைக்கப்பெறும் பணத்திலே வாழுகின்றனர். இவர்களுக்கு … Read more