இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் “தெரு நிகழ்ச்சிகள்”

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு ,இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன் இணைந்து இரு தரப்பு உறவுகளையும், கலாச்சாரத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறையினை மேம்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சிகளை 2022 செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி செப்டம்பர் 26 ஆம் திகதி புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும். அதைத் … Read more

பதினொரு (திருத்தச்) சட்டமூலங்களை இரண்டாம் மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி  

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பதினொரு சட்டமூலங்கள் மற்றும் நான்கு ஆண்டறிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அபாயகரமான விலங்குகள் (திருத்தச்) சட்டமூலத்தில் தண்டப்பணத்தொகையை ஆயிரம் ரூபாவிலிருந்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரும் ரூபாவரை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதுடன், சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சிறுவர்கள் என அழைக்கப்படும் வயது எல்லையை பதினாறிலிருந்து பதினெட்டாக அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ளது. … Read more

மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்க குறுகிய காலத்தில் வேலைத்திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர

மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு குறுகிய காலத்தில் பிரயோகரீதியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தெரிவித்தார். கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வனவிலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பில் குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியயமைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் … Read more

இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு) மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (22) பி.ப 12.30 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 1982ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தின் ஊடாக சட்டத்தின் மூன்றாவது பிரிவு திருத்தப்படுகிறது. இதன் ஊடாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உள்ளடக்கம் (பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை) மாற்றப்படுகிறது. இதன்படி கூட்டுத்தாபனத்தின் எண்ணிக்கை (பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை) 07 … Read more

அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை குறித்து புதிய சுற்றறிக்கை

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுற்றறிக்கையை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார். பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது சேலை அல்லது அலுவலகத்திற்கு பொருத்தமான ஆடையொன்றை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், சேலை உள்ளிட்ட ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இந்த சுற்றறிக்கை … Read more

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி கவிரத்ன தெரிவு

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன  (21) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார். இதன் இணை உப தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே நியமிக்கப்பட்டதுடன், இவருடைய பெயரை கௌரக ரோஹினி கவிரத்ன முன்மொழிந்ததுடன், கௌரவ கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார். மற்றுமொரு இணை உபதலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வேலுகுமார் நியமிக்கப்பட்டார். … Read more

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள்,தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு உயர்பதவிகள் குழுவின் அனுமதி

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (20) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, ஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி மனோரஞ்சன் பெரேராவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக பீ.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக பி.எச்.சி. ரத்நாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக … Read more

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (யுஎஸ்எய்ட்) இலங்கைக்கான தூதரகப் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ்வுடன்  வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (யுஎஸ்எய்ட்) இலங்கைக்கான தூதரகப் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ்வை வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, 2022 செப்டம்பர் 21, புதன்கிழமை வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். யுஎஸ்எய்ட் நிர்வாகத் தூதுவர் சமந்தா பவரின் சமீபத்திய விஜயத்தை வரவேற்ற இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யுஎஸ்எய்ட் இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான மற்றும் அவசரகால உதவிகளுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். யுஎஸ்எய்ட் இன் தூதரகப் பணிப்பாளர், குறிப்பாக நிர்வாகம் மற்றும் சமூக ஒற்றுமை, பொருளாதார அபிவிருத்தி மற்றும் தனியார் துறை வளர்ச்சி; மற்றும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய தமது முன்னுரிமைப் பகுதிகள் போன்ற நாட்டில் யுஎஸ்எய்ட் ஆல் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து இராஜாங்க அமைச்சரிடம் எடுத்துரைத்தார்;. பொருளாதார அபிவிருத்தியில் தனியார் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஒப்புக்கொண்ட யுஎஸ்எய்ட் இன் தூதரகப் பணிப்பாளர், பெறுமதி சங்கிலி மற்றும் பொருளாதாரத்தில் தனியார் துறையின் பங்களிப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் தமது திட்டங்களைக் குறிப்பிட்டார். கிரபைட், பொஸ்பேட் மற்றும் இல்மனைட் உள்ளிட்ட இலங்கையில் கிடைக்கும் கனிம வளங்கள் குறித்து குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்த வளங்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட தொழில்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான யுஎஸ்எய்ட் திட்டங்களின் பங்களிப்பை வரவேற்ற இராஜாங்க அமைச்சர், நாட்டில் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் தொழில்களில் இளைஞர்களின் திறமை மற்றும் புத்தாக்கத் திறன்களை ஆதரிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இது சம்பந்தமாக, அவர் நம்பிக்கைக்குரிய இளம் தொழில்முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு மேலும் ஆதரவளிக்குமாறு யுஎஸ்எய்ட்க்கு அழைப்பு விடுத்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் யுஎஸ்எய்ட் கொழும்பு அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில்  கலந்துகொண்டனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுகொழும்பு2022 செப்டம்பர் 23

அத்தியாவசிய மருந்துகளுடனான சீன விமானம்

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் ஒன்று இன்று (23) இலங்கையை வந்தடைய உள்ளது. 06 மாதங்களுக்கு போதுமான விசர் நாய் தடுப்பூசிகளும் இந்த மருந்துகளுடன் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் இணைப்பதிகாரி வைத்தியர்; அன்வர் ஹம்த்ரானி குறிப்பிட்டுள்ளார்.   மேலும், சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளும்; அதே விமானத்தில் கொண்டு வரப்படுகிறது.   சுகாதார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். … Read more