இலங்கை
சில இடங்களில் மழை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர்23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2022 செப்டம்பர்23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது நாட்டின் … Read more
பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் ஆஸ்த்துமா (மூச்சுத்தடை நோய் (Asthma)) நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் அறுபது சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைக்கான காரணம் குழந்தைகள் அறியாமலேயே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் … Read more
கொழும்பில் இருந்து கண்டி ,அநுராதபுரம் வரை புதிய சொகுசு ரயில் சேவைகள்
வார இறுதியில், கண்டி மற்றும் அநுராதபுரம் வரை இரண்டு புதிய சொகுசு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் இரண்டு புதிய ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன. சனிக்கிழமை அதிகாலையில் பயணிக்க ஆரம்பிக்கும் கண்டிக்கான ரயில் இரண்டு மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் கண்டியை சென்றடையும். அதேவேளை அனுராதபுரத்திற்கான ரயில் நான்கு மணித்தியாலங்களில் அனுராதபுரத்தை சென்றடையும். இவை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பை … Read more
4 நிறுவனங்களுக்கு வீதிமன்ற அழைப்பாணை
சந்தையில் காணப்படும் திரிபோஷா போன்ற பொருட்களில் எப்லொடொக்ஸீன் கலந்துள்ளதாகத் தெரிவித்து தொடரப்பட்ட பல வழக்குகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, அந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் 04 பிரதான நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று (21) உத்தரவிட்டுள்ளார். கொத்தொடுவ பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின், பொது சுகாதார பரிசோதகர் சஜித கசுனால் தாக்கல் செய்யப்பட்ட 04 வழக்குகளை பரிசீலித்த நீதவான்,,சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் … Read more
எரிவாயு தேவை குறைந்தது
தற்போது, நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்கு புதிய சிலிண்டர்களை ஓடர் (orders) செய்யும் லிட்ரோ கம்பனியின் செயற்திட்டமே இதற்குக் காரணம். நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. … Read more
வயோதிபர்கள் அவசியம் 3வது, 4வது தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும்
இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (21) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு நன்கொடை
சுகாதாரத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பு Americares, 7 இலட்சத்து 73ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இவற்றில் கர்ப்பிணி தாய்மாருக்கான விற்றமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், இன்ட்ராவாஸ்குலர் (intravascular) வடிகுழாய்கள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன என தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் நன்கொடைகள் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் … Read more
இந்தியாவில் ,தினசரி கொரோனா பாதிப்பு 5,443 ஆக உயர்வு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தது. இருப்பினும் இன்று சற்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 453 ஆயிரத்து 042 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்தியா முழுவதும் 5 ஆயிரத்து 291 பேர் கொரோனா தொற்றில் … Read more