வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு

வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை சீனாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக ஒழியாமல் உலக மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக முக கவசம் இருந்து வருகிறது. இந்நிலையில் காற்றில் வைரஸ் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் … Read more

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திருமதி. பொன்னி ஹோர்பாக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நெதர்லாந்து இராச்சிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 செப்டம்பர் 16ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,கொழும்பு.2022 செப்டம்பர் 20  

கோலூன்றிப் பாய்தலில் ஏ. புவிதரன் புதிய தேசிய சாதனை   

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கான திறன்காண் மெய்வல்லுநர் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புவிதரன் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். 5.15 மீற்றர் என்ற சாதனையை நிலைநாட்டிய புவிதரன், 5 வருடங்களுக்கு முன் அதாவது, 2017 ஆம் ஆண்டு இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் வீரராக சாதனை நிலைநாட்டிய இஷார சந்தருவனின் 5.11 மீற்றர் என்ற முந்தைய தேசிய சாதனையை முறியடித்து தேசிய சாதனையைப் புதுப்பித்துள்ளார். இதேவேளை, இந்தப் போட்டியின் … Read more

 பொதுமக்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் ஸ்பேஸ் ஊடாக நேரடியாகப் பதில்

இலங்கையில் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்வதன் தேவை தொடர்பில் சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹிணி கவிரத்ன ஆகியோர் கலந்துகொள்ளும் நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் 11.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை பாராளுமன்ற உத்தியோகபூராவ டுவிட்டர் (@ParliamentLK) கணக்கினூடாக இடம்பெறவுள்ளது. இலங்கையில் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்தல்… இந்நாட்டில் பெண்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பான பொதுமக்கள் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க … Read more

இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து செயற்படுமாறு டயஸ்போறாவுக்கு அழைப்பு

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உருவாக்கப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து செயற்படுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். – பிரித்தானிய வாழ் புலம்பெயர் … Read more

இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம்  

இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வெகுஜன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அண்மையில் (16) அனுமதி வழங்கப்பட்டது. வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற வெஜகுஜன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சட்டமூலம்1982ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாகும். இதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைத் … Read more

மோட்டார் வாகனச் சட்டத்தின் (203 ஆம் அத்தியாயம்) கீழான ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 126 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 மார்ச் 31 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் இணக்கம் அண்மையில் (16) வழங்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன தலைமையில் நெடுஞ்சாலைகள் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூடிய … Read more

ரஷ்யப் படைகளின் அட்டூழியம் – இலங்கை தமிழர்களின் திகில் அனுபவம்

உக்ரைன் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்களும் ரஷ்யப் படைகளின் காவலில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு இலங்கையர்களில் திலுஜன் பத்தினஜகனும் ஒருவர். இந்நிலையில், திலுஜன் பத்தினஜகன் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் உயிருடன் வெளியே வரமாட்டோம் என்று நினைத்தோம்” என குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்த போது தான் வசித்து வந்த வடகிழக்கு உக்ரைனில் உள்ள குப்ன்ஸ்கில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள கிர்கிவ் … Read more