T 56 ரக தோட்டாக்களுடன் இளைஞர் கைது

வாழைத்தோட்டம் சுசரித அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் T 56 ரக தோட்டாக்கள், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 15, T 56 ரக தோட்டாக்கள், 120 மில்லி கிராம் போதைப்பொருள், நான்கு போதை மாத்திரைகள் மற்றும் 47,110 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.   இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12 ஐ வசிப்பிடமாகக் … Read more

ஜனாதிபதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது  

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

புதிய வைரஸ் திரிபு பரவும் அபாயம்

உலகில் சில நாடுகளில் தற்போது பரவிவரும் மற்றுமொரு புதிய கொரோனா டீயு.4.6 உபதிரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அதிகமாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 3.3வீதமானவர்கள் இந்த உபதிரிபுத் தொற்றாளர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இது தற்போது 9வீதமாக அதிகரித்திருப்பதுடன்;; டீயு.4.6 தொற்றாளர்கள் இதற்கு சம வீதத்திலேயே அமெரிக்காவிலும் அதனை அண்மித்த சில நாடுளிலும் அடையாம்காணப்;படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இந்த ஒமிக்ரோன் … Read more

தாமரை கோபுரத்தின் முதல் நாள் வருமானம்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான தாமரைக் கோபுரம் நேற்று (15) பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், நேற்று நுழைவுச் சீட்டு விற்பனை ஊடாக ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இதன் முதல்நாள் வருமானம் சுமார் 15 இலட்சத்தை அண்மித்துள்ளது என்று நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, நேற்று சுமார் 2612 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளனர். அவர்களில் 21 … Read more

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்

23 ஆவது தடவையாகவும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. இது பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது.   இன்று முதல் பத்து நாட்களுக்கு காலை ஒன்பது மணி முதல் இரவு ஏழு மணி வரை இந்தப் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர தெரிவித்தார்.  

நம்பகமான உள்நாட்டு செயன்முறையின் மூலம் மனித உரிமைகள் நல்லிணக்கத்தில் தொடர்ந்தும் முன்னேற்றம் காண்பதற்கு இலங்கை அர்ப்பணிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் உரையாற்றிய இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுயாதீன உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். 2022 செப்டெம்பர் 12, திங்கட்கிழமை, ஜெனிவாவில் உள்ள பாலைஸ் டெஸ் நேஷன்ஸில் மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல்-நஷிப் தனது அறிக்கையை சமர்ப்பித்ததைத் … Read more

நிதிச் செற்பாடுகளைக் கண்காணிக்க பாராளுமன்றத்துக்கு புதிய வரவு செலவுத் திட்ட அலுவலகம்

வருவாய்கள் மற்றும் செலவீனங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் குறித்த சரியான தகவல்களைப் பெற்றுக் கொண்டு நிதிச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காகத் தனியான வரவுசெலவுத்திட்ட அலுவலகமொன்றை பாராளுமன்றத்தில் அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக நேற்று (15) தெரிவித்தார். செப்டெம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்படும் ஜனநாயகத் தொடர்பான சர்வதேச தினத்தையொட்டி பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (National Democratic Institute /NDI) … Read more

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அடுத்த வாரம் கூடும்

இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது. சிறுவர்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை மாற்றம் செய்வது அல்லது புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் சகல சிறுவர்களினதும் நல்வாழ்வு குறித்த கொள்கைகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்வது, சிறுவர்களுக்காகப் பணியாற்றும் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுவது மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து … Read more

மூன்று சட்டமூலங்களில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு (130, 132) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களிலும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, 2022ஆம் ஆண்டு 22ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டம் என்ற பெயரிலும், 2022ஆம் ஆண்டு 23ஆம் இலக்க வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) திருத்தச் சட்டம் என்ற பெயரிலும், 2022ஆம் ஆண்டு 24ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) … Read more