' மகளிர் சுகாதார துவாய்' வரியை குறைக்க இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க நடவடிக்கை

அன்றாட விலையேற்றம் காரணமாக மகளிர் சுகாதாரத் துவாய்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகளிர் சுகாதார துவாய்களை, பாடசாலை மாணவிகளுக்கு சலுகை விலையில் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். மகளிர் சுகாதார துவாய் ஆடம்பரப் பொருள் அல்ல அது பெண்களின் சுகாதாரத்திற்கு மிக அத்தியவசியமானது எனவும் அவர் மேலும் விபரித்தார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் … Read more

விளையாட்டுத்துறையின் எதிர்கால அபிவிருத்திக்காக முன்னாள் அமைச்சர்களுடன் சந்திப்பு

விளையாட்டுத்துறையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வெற்றிக்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் அனுபவத்தையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர்களின் சந்திப்பு நேற்று முன்தினம் (13) கொழும்பில் நடைபெற்றது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த சகலரும் அழைக்கப்பட்ட இச்சந்திப்பில் விளையாட்டு துறை அமைச்சர்கள் என்ற ரீதியில் விளையாட்டுத்துறையின் கடந்த கால அனுபவங்கள் ஊடாக எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை சார்ந்த … Read more

கொரோனா தொற்று: முடிவுக்கு வருவதற்கான அறிகுறி – WHO

உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார … Read more

ரி20 தரவரிசையில் முன்னேறிய வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ச

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று (14) வெளியிட்டுள்ள புதிய ரி 20 தரவரிசையில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க மற்றும் பானுக ராஜபக்ச ஆகிய இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதன்படி, ரி20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க 6ஆவது இடத்தையும், ரி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பானுக ராஜபக்ச 33ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 15ஆவது ஆசியக் வெற்றிக்கிண்ண தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையானது … Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான 2ஆம் கட்ட கொடுப்பனவு

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்தை சேர்ந்த சுமார் 26 பேருக்கு கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு பூநகரி பிரதேச செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (14) இடம்பெற்றது. நீர்வேளாண்மை சார் உற்பத்திகளை விருத்தி செய்வதுடன் கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடற்பாசி செய்கைக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கத் … Read more

யாழ் மாவட்டத்தில் நலன்புரி அனுகூலங்கள், சட்டம் தொடர்பான கலந்துரையாடல்

2002 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டம் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் (14) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக நலன்புரி அனுகூலங்கள் பெறும் பொதுமக்களை அடையாளம் காண்பதற்கு விண்ணப்பங்களை QR CODE மூலம் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக … Read more

“வன்முறைக்கெதிரான வெற்றி” செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

“வன்முறைக்கெதிரான வெற்றி” செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15) திகதி மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. தேவை நாடும் மகளீர் (Women In Need) இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளையும் இல்லாதொழிக்கும் நோக்கில் கடந்த 3 தசாப்தங்களாக செயற்பட்டு வருகின்றது. உளவியல், மனநல ஆலோசனை, சட்ட உதவி, அவசரகால தங்குமிட வசதிகள் மற்றும் 24 மணிநேர துரித தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கிப் பணியாற்றுகிறது. தேவை நாடும் மகளீர் ·(WIN), USAID … Read more

பசியோடு இருக்கும் திலீபம்…!

Courtesy: ஜெரா ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் இன்று மிக முக்கிய நாள். திலீபன் எனும் நான்கெழுத்துத் தமிழ் பெயர் அகிம்சையின் அடையாளமாகிய எழுச்சி நாள். 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி காலை 10.38 மணிக்கு இராசையா பார்த்தீபன் என்கிற இயற்பெயரும், திலீபன் என்கிற ‘இயக்கப்’ பெயருமுடைய தியாகத்தின் திருமேனி நல்லூர் வீதியில் இன விடுதலைக்கான விரதத்தில் அமர்ந்த நாள். திலீபனின் கொள்கை “கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு சொட்டு … Read more

அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நபரொருவருக்கு 13,138 ரூபா

நபரொருவருக்கான அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு குறைந்த பட்ச செலவு Minimum Expenditure per person per month to fulfill the basic needs) 13,138 ரூபா என குடிசன மதிப்பீட்டு; புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஜூலை மாதத்திற்காக நபரொருவருக்கு மாதாந்த ஜீவனோபாயத்தையே இவ்வாறு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கிணங்க 2022 ஜூலை மாதத்தின் மதிப்பீட்டிற்கு இணங்க 4பேரைக் கொண்ட குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு குறைந்தது அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 52,552ரூபா அவசியமாகும். அதேவேளை கொழும்பு … Read more