பாராளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட இதுவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் நேற்று  (14) அனுமதிக்கப்பட்டது. இதற்கமைய முதற்கட்டமாக பாராளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கமைய, செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு வருகைதர … Read more

உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டு தலைவிகள் நூறு பேர் பாராளுமன்றத்துக்கு

உள்ளூராட்சிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டு தலைவிகளுக்கான விசேட விழிப்புணர்வூட்டும் செயலமர்வு அண்மையில் (12) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர்  நாயகமுமான குஷானி ரோஹனதீர, சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் (பதில்) பணிப்பாளர் ஜனகாந்த சில்வா, பாராளுமன்ற நிர்வாகப் … Read more

அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைத்தல்

அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயது எல்லை தற்போது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 107 வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து  தங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள 107 வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மஹேஷ் டி சில்வாவிடம் நேற்று கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி சமர்பித்த 2019/04 இலக்க அமைச்சரவை ஆவணத்திற்கு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும், … Read more

பெரும்போகத்தில் சோளப் பயிர்ச் செய்கையை அதிகரிக்க 200 மெட்ரிக் தொன் சோள விதைகள்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் இணைந்து இலங்கையில் சோளப் பயிர்ச் செய்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், 1.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள 200 மெட்ரிக் டொன் ஹைப்ரிட் சோள விதைகளை வழங்குவதற்கு நேற்று (13) இணக்கம் தெரிவித்தன. நேற்று (13) காலை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்குபற்றலுடன், ஆதரவு தெரிவிக்கும் கலந்துரையாடல்  இடம்பெற்றது. அதன்போது, … Read more

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிகளுக்கு வைரஸ் தடுப்பூசி

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிகளுக்கு பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ. சுகுணனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகளுக்கு பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு பாடசாலை அதிபர் அருட் சகோதரி மேரி நிதாஞ்சலி தலைமையில் இன்று (14) இடம்பெற்றது. மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி இ.உதயகுமாரின் வழிநடாத்தலில், கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமீர்தாப், கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் … Read more

417 சிறைக் கைதிகளுக்கு விடுதலை

சர்வதேச கைதிகள் நல தினத்தை முன்னிட்டு 417 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு அமைய விசேட அரச பொது vமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து அபராதம் செலுத்த முடியாத 417 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மகிந்தவை கொலை செய்ய முயற்சி: முன்னாள் பொலிஸ் அதிகாரி உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

2009 ஆம் ஆண்டு குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குண்டு தாக்குதல் நடத்தி கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால் மேல்நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமனிடம் இந்த குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கைவிரல் அடையாளங்கள் இதன்போது, குற்றபத்திரங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். … Read more

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்

ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகக் கூடியதாக நீடிப்பதற்குத் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவிக்கையில், இதற்காக தாம்; பதிவுசெய்துள்ள மாவட்டத்தின் மாவட்ட செயலகத்திற்கு அல்லது கொழும்பிலுள்ள வேரஹெர அலுவலகத்திற்குச் சமூகமளித்து, ஆறு மாத செல்லுபடிக் காலத்தை ஒரு வருட காலமாக நீடித்துப் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது. தற்போது மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளிநாட்டிற்குச் செல்லும் புதிய … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் (Holistic Care Centre) திறப்பு  

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின்; மருத்துவத் துறையும் சமூக, குடும்ப சுகாதார துறையும் இணைந்து செயற்படும் முதலாவது ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் பொது மக்களுக்கு சேவை வழங்குவதை முதன்மையாகக் கொண்டு கிழக்குப் பல்கலைக்கதழகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் 106மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம்  (12) மட்டக்களப்பில் உள்ள பீட வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.  இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.    வைத்தியசாலைகள், வைத்திய … Read more