மகாராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு

ஸ்காட்லாந்தில் காலமான இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் மகாராணி 2-ம் எலிசபெத்தின் உடல் நேற்று முன்தினம் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் எலிசபெத்தின் உடல் விமானம் மூலம் இலங்கிலாந்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்இ ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் மகாராணி 2-ம் எலிசபெத்தின் உடல் நேற்று … Read more

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றினால் 61.46 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.46 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் அனைத்து உலக நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேவேளை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியே 46 இலட்சத்து 56 … Read more

உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்த தேசிய திட்டம் அவசியம் – ஜனாதிபதி

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை ஜனாதிபதி இன்று (13) ஸ்தாபித்தார்.   • பல்துறை ஒருங்கிணைப்பு பொறிமுறை ஆரம்பம் • விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பம்   இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.   விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை இந்திய சுகாதார  அமைச்சு இன்று(13)  காலை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 221-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 4 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 … Read more

வாகன இறக்குமதிக்கு அனுமதி: விசாரணைகளுக்கு துரித அழைப்பு இலக்கங்கள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை பெறுவது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 0112 582 447 என்ற அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) திரு.பிரதாபோத காகொட ஆராச்சிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் … Read more

மின்சார வாகன இறக்குமதி! அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்கள், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 அல்லது 0112 582 447 ஆகிய இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத் தொகையின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சர் … Read more

எலிசபெத் மகாராணியின் உடல் நாளை லண்டனுக்கு எடுத்து செல்லப்படும்

இன்று எலிசபெத் மகாராணியின் உடல் லண்டனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இங்கிலாந்து மகா ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள பாலிமரில் காலமானார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள புனித கில்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தை சுற்றி உள்ள கட்டடங்களில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலைச் சுற்றி ஸ்காட்லாந்து அரச வழிமுறைப்படி வெள்ளை மலர்கள் வைக்கப்பட்டு, … Read more