பொருளாதார நிதிச் சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவு – ஆசிய அபிவிருத்தி வங்கி

நாட்டின் அபிவிருத்திக்காகவும், பொருளாதார மற்றும் நிதிச் சவால்களை எதிர்கொள்வதற்காகவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யொக்கயமா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு நேற்று (12) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் குறித்து அங்கு கவனம் செலுத்தப்பட்டது.

19 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை

செப்டம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள துக்க தினத்திற்கு அமைவாக இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. 51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தொடர்பாக தயாரிக்கப்பட்ட 36 பக்க அறிக்கை இன்று மனித உரிமைகள்  கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அந்த அறிக்கையில் இந்த மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முதன்முறையாக பொருளாதார குற்றச்சாட்டு மனித … Read more

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்கு உதவிய குழுவினர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்வதற்கு உதவிய ஐவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைசேனை விசேட அதிரடி முகாம் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் எல்லை பகுதிக்கு உட்பட்ட கரையோர பகுதியில் நேற்று (12) முற்றுகை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு படகு மூலம் போக்குவரத்து வசதி செய்தமைக்காக கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

  ஆசியக் கிண்ணத்தின் பின்னர் தசுன் சாமரவின் அடுத்த எதிர்பார்ப்பு!

எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெறுவதே தனது அடுத்த எதிர்பார்ப்பு என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவிக்கிறார். எட்டு வருடங்களுக்குப் பிறகு ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை தசுன் ஷானக தலைமையிலான இலங்கைக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளனர்.. டுபாய் விளையாட்டு மைதானத்தில் நேற்று (11) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெறுவது இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதைத் தீர்மானிக்கும் காரணியாகும் என்ற கிரிக்கெட் விமர்சனங்களின் பின்னணியில் … Read more

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் நேற்று இலங்கை வந்தடைந்தார்

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் நேற்று (11) இலங்கை வந்தடைந்தார். ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பிற்கு அமைய அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தினுடைய இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று இலங்கையை வந்தடைந்த மார்ட்டின் சுன்கொங் அவர்களை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் ராமநாதன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கடமைகளை பொறுப்பேற்பு

2022 செப்டம்பர் 09ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற எனிமையான வைபவமொன்றில் வைத்து வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதிகாரிகளுக்கு மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணியை வினைத்திறனுடன் … Read more

சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் நன்கொடை

சாம்பியா இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150 ரேபிஸ் தடுப்பூசிகளை சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நன்கொடையானது, திரு. ரொனி பீரிஸ் அவர்களுடன் இணைந்து சாம்பியாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவர் எல்மோ ஜயதிலக அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், சுகாதார அமைச்சின் வைத்தியர் அன்வர் ஹம்தானி இலங்கையிலிருந்து ஒருங்கிணைத்தார்.  கௌரவ தூதுவரின் கூற்றுப்படி, சாம்பியாவில் உள்ள இலங்கையர்களும் தமது தனிப்பட்ட திறன்களில் சுமார் 10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக … Read more

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (செப். 12) இடம்பெற்ற எளிமையான நிகழ்வில் சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கடந்த வியாழக்கிழமை (8) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி … Read more