இலங்கையில் பணவீக்கம் குறையும் சாத்தியம் – மத்திய வங்கி ஆளுநர் தகவல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த காலங்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான முடிவுகள் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். அந்த நிலையில் எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என நம்புவதாகவும் அவர் கூறினார். அந்நிய செலாவணி பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளதுடன் வங்கி முறைமையில் அந்நிய செலாவணி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் … Read more

பல்கலைக்கழக அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது ,தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாத ,ஆனால் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும், இனிமேல் அந்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

போர் குற்றச்சாட்டு தொடர்பில் ரிஷி சுனக்கின் நிலைப்பாடு – தமிழர்களின் பங்களிப்பிற்கும் பாராட்டு

பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக், இலங்கையில் நடந்த பாரிய அநீதிகளுக்கு நீதி வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்யார். அத்துடன், ரஷ்யர்கள் மீது இங்கிலாந்து விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைப் போன்று இலங்கை அதிகாரிகள் மீதும் இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைப் பிரயோகிக்கும் சாத்தியம் குறித்தும் தெளிவுப்படுத்தியுள்ளார். பிரித்தானிய தமிழ் பழமைவாதிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் போது பிரித்தானியாவில் தமிழ் மக்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார … Read more

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2022இன் முதலாமரையாண்டு

கொழும்பு மாவட்டத்தின் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் முதலாமரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு 17.0 சதவீத மாற்றத்தினால் 186.9 ஆக அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் ஆண்டு அதிகரிப்பும் (17.0) அரையாண்டு அதிகரிப்பும் (4.6 சதவீதம்) 2021இன் அரையாண்டுப் பகுதியில் அவதானிக்கப்பட்ட அதிகரித்த போக்கின் வீழ்ச்சியைக் காண்பித்தன. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி விலைமதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய … Read more

காற்றாலை மின் திட்டங்களுக்கு தற்காலிக அனுமதி

இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கு அதானி பசுமை சக்திக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர கூறியுள்ளார். புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலமான திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (16) இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான … Read more

விமான சேவைக்கு தேவையான எரிபொருளை வழங்க ஆலோசனை

இலங்கையில் சேவைகளில் ஈடுபட்டுள்ள விமானங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி விமான எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தின் அவசியம் பற்றி துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு.நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிற்கு உள்ளே மற்றும் நாட்டிற்கு வெளியே புறப்படும் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் வழங்க முடியாவிட்டால், அந்த எரிபொருளை இறக்குமதி செய்யும் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விமான நிலையத்தில் விமான எரிபொருளைப் பெறுவதில் … Read more

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக திரு. போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி மாலை 3.30 மணிக்கு சமர்ப்பித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுகொழும்பு2022 ஆகஸ்ட் 18

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

  670 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடி படையினர் ளுவுகு நேற்று (17) கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 1.45 மில்லியன் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என எஸ் டி எஃப் தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரை கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் … Read more

உயர்தர பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 19, 20 , 21 ஆம் திகதிகளில்..

2021 (2022) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகக்குத் தோற்றத்தவறிய   மாணவர்கள் மீண்டும் அந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான உரிய திகதிகள் மற்றும் பரீட்சை நிலையங்களை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அந்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பரீட்சை பின்வரும் நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. செயன்முறைப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள … Read more