பஸ் கட்டணத்திற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படுமாயின் கடும் நடவடிக்கை

மறுசீரமைக்கப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பஸ் கட்டண மறுசீரமைப்புக்கு அமைவாக அன்றி, சில தனியார் பஸ்களில் ஆகக்கூடுதலான தொகை கட்டணமாக அறவிடப்படுவதாக பயணிகள் முறைப்பாடு செய்திருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். பஸ்களில் மறுசீரமைக்கப்பட்ட பஸ் கட்டணங்களை காட்சிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறுந்தூர ஓட்ட வீரர் ஹிமாஷா இசானுக்கு 4 வருட கால போட்டி தடை

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதனால் ,குறுந்தூர ஓட்ட வீரர் ஹிமாஷா இசானுக்கு 4 வருட கால முழுமையான போட்டி தடை விதிப்பதற்கு இலங்கை ஊக்க மருந்து தடுப்பு பிரிவினர் தீர்மானித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 03 ஆம் திகதி இது தொடர்பில் இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிலையத்தினால் நடத்தப்பட்ட ஒழுக்க குழு பரிசோதனை சிபாரிசு அடிப்படையில் இவர் தவரிழத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டதனால் இந்த தடை விதிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. யுபூன் அபேகோனுக்கு … Read more

மாத மற்றும் நாள் சம்பளத்தொகை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தேசிய குறைந்தபட்ச மாத மற்றும் நாளென்றுக்கான சம்பளத்தொகைகளை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மாத சம்பளம் இதன்படி, தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச மாதாந்த சம்பளத் தொகையான 12500 ரூபாவை 17500 ரூபாவாக உயர்த்துவதற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய குறைந்தபட்ச மாத சம்பளத்தை ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச நாள் சம்பளம் மேலும் குறைந்தபட்ச … Read more

18,800 லீட்டர் டீசலுடன் நால்வர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட 18 ஆயிரத்து 800 லீட்டர் டீசலுடன் 4 பேரை ஹம்பாந்தோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (10) அதிகாலை 2 மணியளவில் ஹம்பாந்தோட்டை ஸ்ரீபோபுர பகுதிகளில் இதுதொடர்பான முற்றுகை மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உப்பு ஏற்றி செல்ல பயன்படும் பாரிய லொறி ஒன்றும், மீனை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட … Read more

உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்

மீண்டும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.  மின்கட்டண அதிகரிப்புடன், பல வகையான உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்துவதில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் கூறினார். தயிர், ஐஸ் கட்டிகள், ஐஸ்கிரீம், குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் பானப் போத்தல்கள், கோழி இறைச்சி உள்ளிட்ட பல வகையான உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிக்கும் என்றும், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக மக்களிடம் … Read more

மின்சார சபை ஊழியர்களுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம்

எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க  இதனை தெரிவித்துள்ளார். வருடத்திற்கு மூன்று போனஸ் எண்ணெய் கூட்டுத்தாபனம் உட்பட நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் வருடத்துக்கு மூன்று போனஸ் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டடார். எரிபொருள், எரிவாயு கிடைக்காதது அரசாங்கத்தின் தவறே தவிர மக்களின் தவறல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை … Read more

ஆகஸ்ட் 19 முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம் – எரிசக்தி அமைச்சர்

ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகர இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   மேலும், கடந்த நான்கு வாரங்களாக மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை விநியோகிக்க முடியவில்லை. இருப்பினும், தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.   கடந்த காலங்களில் சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டில் இல்லாததனால் மண்ணெண்ணையை … Read more

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் மறைக்கப்படும் உண்மைகள் – வாசுதேவ நாணயக்கார

பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோலிய அமைச்சரும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகளை மறைக்கின்றனர் என்பது அவர்களின் நடத்தையில் இருந்து தெளிவாகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்ற போதிலும் அதனை வழங்க முடியுமா இல்லையா என்பதை அமைச்சர் ஆராயாமல் இருப்பது பிரச்சினையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்தில் உண்மை உள்ளதா என்பதைக் … Read more

சீஷெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா ,எத்தியோப்பியா அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து  

சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள சீஷெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன் (Wavel Ramkalawan), அவர்கள், இலங்கை தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அனைத்து சவால்களையும் வென்று பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை அடையும் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு டென்மார்க் பிரதமர் மெட் பிரடெரிக்சன் (Mette Frederiksen) தனது … Read more