எந்தெந்த ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெறுகின்றன?

பொதுவாகவே கூகுள் தயாரிப்பு மொபைல்களான pixelகளில்தான் இந்த அப்டேட்கள் கிடைக்கப்பெறும். அதற்கு பிறகு எந்த ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு13 அப்டேட்டை வெளியிட போகின்றன என்பதை நாங்கள் உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். ரியல்மீ (Realme) ஸ்மார்ட் போன் வரிசையில் முதலிலேயே ஆண்ட்ராய்டு13 க்கான செயல்பாடுகளை துவங்கிய நிறுவனம் ரியல்மீதான். RealMe GT 2 பயனீட்டாளர்கள் குறைந்த பயனாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் பெட்டா டெஸ்டிங்கிற்கு ஆகஸ்ட் 4 முதலே விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனாலும் , இன்னும் எந்த தேதியில் ஆண்ட்ராய்டு13 … Read more

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: புதிய வரைபடத்தை வெளியிட்ட இஎஸ்ஏ

சிகப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் தண்ணீர் இருந்ததை சுட்டிக்காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA). மனிதர்களின் எதிர்கால வசிப்பிடமாக இந்த கோள் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த வரைபடம் வெளியாகி உள்ளது. உலக நாடுகள் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் தங்களை மற்ற நாடுகளுக்கு முன்பு செல்வாக்கு மிக்க வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு … Read more

iphone 14: இந்தியாவில் உற்பத்தியை துவங்குகிறதா ஆப்பிள் நிறுவனம்?

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் மிக பெரிய ஐபோன் உற்பத்தி கூடம் சீனாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து சீனா மற்றும் அமெரிக்கா இடையில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் பெரும் உற்பத்தியை துவங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. Apple 14 உற்பத்தியை அதன் ஆரம்பகட்ட தயாரிப்பு முடிந்து சீனாவிலிருந்து டெலிவரி செய்யப்பட்ட பிறகு இரண்டு மாதங்களில் இந்தியாவில் துவங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதற்காக … Read more

யார் இந்த கூகுள் கொண்டாடும் இந்தியர் அன்னா மணி?

வரலாறு எப்போதும் சாதனையாளர்களை தோற்கடிப்பதில்லை. அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டாலும், படாமல் போனாலும் அவர்கள் மறைந்த பிறகு அவர்கள் ஆற்றிய சேவையால் காலத்திற்கும் அவர்களை நினைவு கூர்வதே வரலாறு அவர்களுக்கு தரும் வெற்றி. அப்படி இந்திய அறிவியல் ஆராய்ச்சி துறையில் மைல்கல்லாக இருந்த அன்னா மணியை அவரது 104வது பிறந்தநாளில் கௌரவித்து டூடுல் வெளியிட்டுள்ளது கூகிள். யாரிந்த அன்னா மணி? கேரளாவில் 1918ஆம் ஆண்டு பெருமேடு பகுதியில் சிரிய-கிறிஸ்துவ குடும்பத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பிறந்தவர் … Read more

Nasa Jupiter: நாசா வெளியிட்டுள்ள வியாழன் கோளின் பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்!

தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மிஷன் நாசா , ஐரோப்பியன் மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட்டிணைந்து நடத்தி வரும் மிஷன் ஆகும். தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் டிசம்பர் 2021 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. தற்போது பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் தி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பால் கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் வியாழன் கோளில் பொழுது விடிவது, நிலா … Read more

காற்று மாசிலிருந்து பாதுகாப்பு: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய ஹெல்மெட் தயாரித்த ஸ்டார்அப் நிறுவனம்

புதுடெல்லி: தூய்மையான காற்றை சுவாசிக்க உதவி செய்யும் புதிய தலைக்கவசம் ஒன்றை டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. ‘ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ்’ என்ற அந்த புதிய நிறுவனம் தயாரித்துள்ள அந்த தலைக்கவசத்தில் ‘புளூடூத்’துடன் இணைக்கப்பட்ட செயலி ஒன்று உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது. இந்த புதிய நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொடக்க நிதியை பெற்று, நொய்டாவில் உள்ள அறிவியல் … Read more

நாய்ஸ்ஃபிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: 50 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் அசத்தும் அம்சங்கள்

சென்னை: இந்தியச் சந்தையில் நாய்ஸ்ஃபிட் (NoiseFit) கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியுள்ளது. 50 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் அசத்தலான அம்சங்களை உள்ளடக்கி இந்த வாட்ச் வெளிவந்துள்ளது. இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்ப்போம். நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்பட்களை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் Wearable டிவைஸ்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் நாய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், நாய்ஸ்ஃபிட் கோர் 2 என்ற ஸ்மார்ட்வாட்ச்சை இந்நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. கடந்த சில … Read more

10வது வயதில் அடியெடுத்து வைக்கும் Google play storeன் பத்தாண்டு அசாத்திய பயணம்!

2012இல் துவங்கப்பட்ட Google play store உலகளாவிய ஒரு பயன்பாட்டு செயலியாக வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 190 நாடுகளுக்கும் மேல் 2.5 பில்லியன் பயனர்களோடும்,2 மில்லியனுக்கும் அதிகமான ஆப் டெவெலப்பர்களோடும் வெற்றிகரமான ஒரு செயலியாக செயல்பட்டு வருகிறது .கல்வி, மருத்துவம், பண பரிவர்த்தனை, கேமிங், வணிகம் , ஸ்டார்ட்டப்ஸ் , உடல்நலம் என எல்லா துறையிலும் Google play store பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமையல் முதல் சாதனைகள் வரை எப்படி செய்வது என கற்று தர செயலிகள் … Read more

'மீம்ஸ்' பார்க்க தினமும் 30 நிமிடங்கள் வரை செலவிடும் இந்திய நெட்டிசன்கள்

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் வரை மீம்ஸ் பார்க்க நேரம் செலவிட்டு வருவதாக RedSeer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை ஆய்வறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளது அந்நிறுவனம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் 80 சதவீதம் மீம்ஸ் பார்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயனர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மீம்ஸ் பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு துறையில் மீம்ஸ்கள் உச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இந்த டிமாண்ட் … Read more

USB மூலம் பரவும் Malware-கள்: நிபுணர்கள் எச்சரிக்கை.

டிஜிட்டல் உலகத்தில் இணையம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த இணையத்தை இயக்க பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களை நாம் பயன்படுத்தி கொண்டிருக்கின்றோம். அதில் நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் முதல் அதற்கு charge போட பயன்படும் USB கேபிள் வரை அடங்கும். அத்தகைய USB மற்றும் பென்டிரைவ் போன்ற removable சாதனங்கள் மூலமாக ஏற்படும் cyber threats அதிகரித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.’2022 Honeywell Industrial Cybersecurity USB Threat Report’ … Read more