இப்படி ஒரு Asus போனா – Flipkart-இல் இன்று முதல் விற்பனை ஆரம்பம்!

Flipkart தளத்தில் Asus 8z ஸ்மார்ட்போன் இன்று (மார்ச் 7) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு கையில் வைத்து பயன்படுத்தும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு, அதாவது ரூ.2,150 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ரூ.14,800 வரை பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பயன்படுத்தி, பவர்புல் ஆசஸ் 8 … Read more

11ஜிபி வரை டர்போ ரேம் – விற்பனைக்கு வந்த Poco M4 Pro ஸ்மார்ட்போன்!

சியோமியின் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட், மூன்று லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களுடன் இந்த போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் களம்கண்டுள்ளது. இதன் விற்பனை இன்று முதல் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் தொடங்கியுள்ளது. சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. குறைந்த விலையில் அதிரடி … Read more

Free Fire MAX redeem code: அதிரடி கேமின் அதிரவைக்கும் சலுகைகள்!

தினமும் கரீனா பிரீ பையர் மேக்ஸ் கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (மார்ச் 7) Garena Free Fire MAX விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் … Read more

வெறும் ரூ.349க்கு வெளியான Lava X2 ஸ்மார்ட்போன் – அதிர்ச்சியாகாம விவரத்த படிங்க!

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Lava, சில ஆண்டுகள் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் சந்தையில் போட்டியிட முடியாமல் ஒதுங்கி இருந்தது. இந்நிலையில், லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அதிரடியாகக் களமிறக்கியது. போன் வெளியிட்ட கையோடு, சீன நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டது. அதில், ரியல்மி 8 எஸ் ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்தால் லாவா அக்னி 5ஜி போன் இலவசமாக தரப்படும் என்பது தான். சீன நிறுவனத்தைத் திக்குமுக்காட வைத்த இந்த … Read more

நாட்டில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 100 கி.மீ தூரத்துக்கு குவான்டம் தகவல் தொடர்பு சோதனை வெற்றி: டிஆர்டிஓ, டெல்லி ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை

நாட்டில் முதல்முறையாக, குவான்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 கி.மீ. தூரத்துக்கு பாதுகாப்பாக தகவலை பரிமாறும் வகையில் டிஆர்டிஓ, டெல்லி ஐஐடி இணைந்து நடத்தியசோதனை வெற்றி பெற்றுள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள், டெல்லி ஐஐடி பேராசிரியர்கள் இணைந்து குவான்டம் தகவல் தொடர்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் – விந்தியாசல் நகரங்கள் இடையே ‘குவான்டம் சாவி விநியோகம்’ (Quantum … Read more

மார்ச் 10 வெளியாகும் பட்ஜெட் விலை Realme 9 சீரிஸ் 5ஜி போன்கள்!

Realme நிறுவனம், ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் 10ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. சமீபத்தில் நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9 சீரிஸில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் வரவு குறித்து பயனர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தனது புதிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி குறித்து நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. Flipkart ஷாப்பிங் தளம் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. வெளியாக இருக்கும் … Read more

கடைகளில் விற்பனைக்கு வந்த JioPhone Next மொபைல் – விலை ரொம்ப கம்மி!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, நாட்டிலேயே மலிவான 4ஜி போனை அறிமுகம் செய்தது. கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் படி, இந்த மலிவு விலை JioPhone Next ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டது. மின்னணு வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் , தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக, அருகிலுள்ள ஜியோ கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் தான் உலகிலேயே மிகவும் விலை குறைந்த 4ஜி ஸ்மார்ட்போன் … Read more

அவசரப்பட்டுடீங்களே புடின் – உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அதிரடி முடிவு!

அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களின் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்களும் பின்வாங்காமல் நாட்டை காக்கத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த சூழலில், டெக் நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் கோரிக்கை வைத்திருந்தது. இதற்கு சிலிக்கான் வேலியின் பல பெரும் டெக் நிறுவனங்கள் செவி சாய்த்துள்ளது. சமூக வலைத்தளங்கள், அண்டை நாடுகள் என உக்ரைனுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. … Read more

Asus விவோபுக் 2 இன் 1 லேப்டாப் அறிமுகம் – அனைத்து டாஸ்குகளும் இனி ஈஸி தான்!

ஆசஸ் நிறுவனம் புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது. விவோபுக் 13 ஸ்லேட் 2 இன் 1 என்று பெயரிடப்பட்டுள்ள மடிக்கணினி அனைத்து டாஸ்குகளுக்கும் உகந்ததாக இருக்கும் என ஆசஸ் தெரிவித்துள்ளது. ஆசஸ் நிறுவனம், கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. அதுமட்டுமில்லாமல், மொபைல் தயாரிப்பிலும் நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆசஸ் தரப்பில் இருந்து ரோஜ் 5 எஸ் கேமிங் போன், ஆசஸ் 8 இசட் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், … Read more

Metaverse போன் கேள்வி பட்டிருக்கீங்களா – தொழில்நுட்ப புரட்சி செய்யவரும் HTC நிறுவனம்!

தைவான் நாட்டைச் சேர்ந்த HTC நிறுவனத்திற்கு ஸ்மார்ட்போன் தயாரிப்பு என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் களமாடும் பல நிறுவனங்களுக்கு மூதாதையர் தான் எச்டிசி. ஸ்மார்ட்போன்கள் என்றால் என்னவென்றே அறியாத காலகட்டமான 2004 காலவாக்கில், விண்டோஸ் இயங்குதளம் கொண்ட டச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை எச்டிசி தயாரித்து வந்ததை இக்காலத்தினர் அறிந்திருப்பது கேள்விக்குறிதான். அதனைத் தொடர்ந்து எழுந்த டெக் வளர்ச்சியின் காரணமாக, 2008ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட எச்டிசி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த … Read more