அண்ணா சீரியல்: பால் குடத்தில் ஆசிடை கலக்கும் முத்துப்பாண்டி.. ரத்னாவுக்கு நடக்க போவது என்ன?

Anna Zee Tamil Serial Today’s Update: பால் குடத்தில் ஆசிடை கலக்கும் முத்துப்பாண்டி.. ரத்னாவுக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்

கன்னட தயாரிப்பாளர் துவாரகீஷ் மரணம் : ரஜினிகாந்த் இரங்கல்

கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் துவாரகீஷ் நேற்று காலமானார். 81 வயதான இவர் இதயம் செயலிழந்த நிலையில் மரணத்தை தழுவியுள்ளார். திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வரும் நிலையில் அவரது மிக நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் இவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய நீண்டநாள் நண்பரான துவாரகீஷின் மரணம் எனக்கு ரொம்பவே வேதனை அளிக்கிறது. ஒரு நகைச்சுவை நடிகராக … Read more

என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!

  சென்னை: விஜய் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகர் புகழ். சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்ற புகழ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை பலர் அவாய்ட் பண்றாங்க என்று கண்கலங்கி பேசி உள்ளார். விஜய் டிவி என்று சொன்னாலே ஒரு

புதிய சீரியல் இயக்கும் திருமுருகன்

மெட்டி ஒலி, நாதஸ்வரம், தேன் நிலவு, கல்யாண வீடு உள்ளிட்டு பல மெகா சீரியல்களை இயக்கி முக்கிய வேடங்களில் நடித்தவர் திருமுருகன். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அவர் இயக்கிய கல்யாண வீடு என்ற சீரியல் முடிந்த நிலையில் அடுத்த சீரியல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது திருமுருகன் தன்னுடைய புதிய சீரியல் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தனது புதிய சீரியல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு … Read more

விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிப்புக்காக எதையும் செய்ய தயராக இருக்கும் நடிகர் விக்ரம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், தங்கலான் படக்குழுவினர் அப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் உருவாகி

Vikram: `யாரிந்த நடிகர்!' ஆச்சர்யப்பட்ட கமல்; காந்திக்கு டப்பிங் – விக்ரம் பிறந்தநாள் பகிர்வு!

விக்ரமின் பிறந்தநாள் (ஏப்ரல் 17) இன்று. ‘சேது’ ‘பிதாமகன்’, ‘தெய்வத் திருமகள்’ ‘ஐ’ என தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அதன் கதாபாத்திரத்திற்காக தன்னையே வருத்தி, செதுக்கி நியாயம் செய்கிறவர் ‘சியான்’ விக்ரம். நமக்குத் தெரிந்த விக்ரம் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய பக்கங்கள் இங்கே… கமலுடன்.. * பி.சி.ஶ்ரீராம் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் ‘மீரா’. அந்தப் படத்தின் போஸ்டர் டிசைன்களில் விக்ரமைப் பார்த்த கமல்ஹாசன், அவரை நேரில் கூப்பிட்டு பாராட்டியிருக்கிறார். விக்ரம் டப்பிங் கலைஞர் … Read more

ரூ.50 கோடி வசூலை கடந்த பஹத் பாசிலின் ஆவேசம்

மலையாளத்தில் உருவான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படம் மலையாளம், தமிழ் உள்பட பல மொழி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து வெளியான பிரேமலு, ஆடு ஜீவிதம் போன்ற மலையாள படங்களும் கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நாயகனாக நடித்துள்ள ஆவேசம் என்ற படம் திரைக்கு வந்து ஐந்து நாட்களில் ரூ.50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. வித்தியாசமான … Read more

ஜெய்பீம் படத்தில் கண்ணில் மிளகாய்பொடி தூவும் சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா? மணிகண்டன் பேட்டி!

சென்னை: ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லியோமோஸ் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடித்த மணிகண்டன் கண்ணில் மிளகாய் தூள் காட்சி குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் திரைப்படம் 2021ம் ஆண்டு நேரடியாக

‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..

Madhan Karky About GOAT Whistle Podu Song : விஜய் நடிப்பில் உருவாகிவரும் GOAT படத்தின் ‘விசில் போடு’ பாடல் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, கடும் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது.   

மம்முட்டியின் டர்போ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளத்தில் சமீபகாலமாக சிறிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பையும், கோடிகளில் வசூலையும் வாரிக் குவித்து வருகின்றன. அதேசமயம் கடந்த வருடத்திற்கு முன்பு வரை சற்று இறங்கு முகத்தில் இருந்த நடிகர் மம்முட்டியின் படங்கள் கடந்த வருட இறுதியிலும், இந்த வருட துவக்கத்திலும் ஒவ்வொன்றாக வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் வெளியான பிரம்மயுகம் படத்தில் ஒரு புதிய மம்முட்டியை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் … Read more