'லால் சலாம்' படத்தின் 2 நிமிட காட்சி, மத வசனங்கள் நீக்கம்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், 'லால் சலாம்'. இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. படம் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது. … Read more