Vijay Antony: ”என் மகள் மீரா மிக அன்பானவள்… அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”: விஜய் ஆண்டனி உருக்கம்
சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இருதினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். மீராவின் தற்கொலை செய்தி, திரை பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து மீராவின் உடலுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தனது மகள் மீராவின் உயிரிழப்பு குறித்து, விஜய் ஆண்டனி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.