"1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத மக்கள்…" – விஜய்க்கு ஃபெஃப்சி வாழ்த்து!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்றிருக்கிறது தவெக. இதனையடுத்து, தமிழ் திரையுலகினர் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். தவெக தலைவர் விஜய் அந்த அறிக்கையில், “தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் உங்களுடைய மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களின் வெற்றி ஒரு நுாற்றாண்டின் … Read more

ரஜினிகாந்த் to சிவகார்த்திகேயன்: விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்!

Celebrities Wishing TVK Vijay : சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் விஜய் வெற்றி பெற்றிருப்பதையடுத்து பல கோடி பேர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

TVK: `விஜய்க்கு வாழ்த்து… ஸ்டாலினுக்கு ஆதரவு…' – நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. 2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது. அதேநேரம், கொளத்தூர் தொகுதியிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருக்கிறார். இந்த நிலையில், திமுக கட்சியின் தீவிர ஆதரவாளரான நடிகர் சத்யராஜ், “விஜய் அவர்களுக்கும் தவெக எம்.எல்.ஏ-க்களுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய கொள்கை தலைவர்கள் … Read more

"முதல் தேர்தல் களம் இவ்வளவு பிரமாண்டமாக அமைந்தது வியப்பாக இருக்கிறது"- விஜய்யை வாழ்த்திய விஷால்

234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் விஷால் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “விஜய்யின் முதல் தேர்தல் களம் இவ்வளவு பிரமாண்டமான தொடக்கமாக அமைந்தது வியப்பாக இருக்கிறது. வாழ்த்துகள் தளபதி! இந்தத் தருணத்திற்குச் சொந்தக்காரரான அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். தவெக விஜய் தமிழகம் முழுவதும் மீண்டும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்து எழுச்சி மீண்டும் ஒருமுறை எதிரொலிக்கிறது. மக்கள் ஒரு … Read more

TVK: "நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது!" – விஜய்யை வாழ்த்திய சூர்யா!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தவெக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். இதுபோக, சென்னையில் பெரும்பாலான இடங்களையும் தவெக கைப்பற்றியிருக்கிறது. இப்படியான அபார வெற்றிக்கு, சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Suriya விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா, “மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை … Read more

"முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள்"- சிவகார்த்திகேயன்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 105 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். விஜய்யின் இந்த அதிரடி வெற்றிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தவெக விஜய் அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் த.வெ.க தலைவர் விஜய்யை வாழ்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” போட்டியிட்ட … Read more

"நான்தான் சிஎம்": 22 ஆண்டுகளுக்கு முன் திரிஷா பேசியது நிஜமாகப்போகிறதா?

திரிஷாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 2004 ஆம் ஆண்டு நடிகை திரிஷா அளித்த ஒரு நேர்காணலில், அடுத்த 10 ஆண்டுகளில் நான் முதலமைச்சர் ஆவேன், முதலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள், பிறகு மற்றவற்றைச் சொல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே பேசியிருந்தார்.

D55: பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் – மம்மூட்டி கூட்டணி; வேகமெடுக்கும் படப்பிடிப்பு

அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ். ‘கர’வுக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘டி 55’ படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடர்கிறது. படப்பூஜையில் தனுஷின் 55வது படமாக ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படம் உருவாகிறது. இதன் படப்பூஜையில்கூட இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய்பல்லவி, … Read more

ரஜினி படத்தில் இருந்து விலகியது ஏன்? முதல் முறையாக சொன்ன சுந்தர் சி!

ரஜினிகாந்த் படத்தை இயக்குவதிலிருந்து விலகியது ஏன்? பல நாட்களுக்கு பிறகு உண்மையை உடைத்த சுந்தர் சி! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

Sivakarthikeyan: "வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படம் கைவிடப்பட்டதா?" – விளக்கும் தயாரிப்பாளர்

நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள தகவலை வெங்கட் பிரபுவே முன்னர் ஒரு மேடையில் அறிவித்திருந்தார். SK 26 – Seyon சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தைப் பற்றி, கடந்த சில நாட்களாக இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, இப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் பேசப்பட்டன. … Read more