பாலா To லோகேஷ்..முதல் படத்திலேயே மாஸ் ஹிட் கொடுத்த முத்தான இயக்குநர்கள்..!

தமிழ் இயக்குநர்கள் சிலர் தங்கள் முதல் படங்களின் மூலமாகவே மாஸ் ஹிட் கொடுத்துள்ளனர். யார் அந்த முத்தான இயக்குநர்கள் தெரியுமா..?  

நம்மவர்: `அப்பவே கமல் இதை செஞ்சுட்டாரே!' நாகேஷ், கௌதமி, கரண் அற்புதமான நடிப்பும் கல்வி அரசியலும்!

கமல்ஹாசனின் சிலபல திரைப்படங்கள், சில வருடங்களுக்குப் பிறகு தாமதமாகத்தான் சிலாகிக்கப்படும். `அடடே… அப்பவே இப்படி!’ என்று வியக்கப்படும். `குணா’ போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இது ஒரு வகை. இன்னொரு வகையும் உண்டு. சில படங்கள் வெளிவந்த புதிதில் மட்டுமல்ல, சில வருடங்கள் கழித்தும் கூட கண்டுகொள்ளப்படாமலேயே போய் விடும் துரதிர்ஷ்டம் நிகழும். அப்படியொரு படம்தான் `நம்மவர்’. சினிமாவின் உள்வட்டாரத்தில் எம்.ஜி.ஆரை ‘சின்னவர்’ என்று அழைப்பார்களாம். கமலுக்கு அது போன்றதொரு அடையாளத்தை ‘நம்மவர்’ என்கிற அடைமொழியின் மூலம் … Read more

ரஜினி, விஜய் கைவிட்டனர்: தெலுங்கு படம் இயக்கும் சிபி சக்ரவர்த்தி

இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தை இயக்கினார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் கொடுத்தது. படத்தை பார்த்த ரஜினியும், விஜய்யும் சிபி சக்ரவர்த்தியை அழைத்து பாராட்டியதோடு அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் கொண்டு கதையும் கேட்டனர். ஆனால் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இவர்களிடமிருந்து அழைப்பு வரும் என்று ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த சிபி தற்போது தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறார். நானி நாயகனாக நடிக்கும் … Read more

ஓபன்ஹெய்மர் படத்துக்காக பகவத் கீதை படித்தேன்.. கிறிஸ்டோபர் நோலன் பட ஹீரோ சொன்ன சூப்பர் தகவல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஓபன்ஹெய்மர் படம் ஜூலை 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதன் ப்ரீமியர் காட்சிகளுக்காக அந்த படத்தில் நடித்த சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் மேட் டேமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். மெமென்டோ, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனெட் என புரியாத புதிர்களை கொண்ட படங்களை புதிர் போட்டியே இயக்கி வரும் புத்திசாலி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் தற்போது அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் … Read more

Kamal: கமலுக்காக மீண்டும் அரசியலில் களமிறங்கும் வடிவேலு?இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

வைகைப்புயல் வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் தான் யார் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நகைச்சுவை நாயகனாக கலக்கி வந்த வடிவேலு தன்னால் வித்தியாசமான கதாபாத்திரங்களும் பண்ணமுடியும் என மாமன்னன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் மாமன்னன் படத்தில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கைத்தட்டலையும் அள்ளினார் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக வடிவேலு சற்று சறுக்கலை சந்தித்தார் என்றுதான் சொல்லவேண்டும். பல சர்ச்சைகள் ,பல பிரச்சனைகள் என அனைத்தையும் … Read more

மணமேடையில் விஜய், ஐஸ்வர்யா! சண்டக்கோழி சீரியல் அப்டேட்!

Sandakozhi Serial Update: வெளிவந்த அசோக்கின் உண்மை முகம்… மணமேடையில் விஜய், ஐஸ்வர்யா.. ஆனாலும்? – உச்சகட்ட திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல்!  

Lokesh kanagaraj: ரஜினி – லோகேஷ் கனகராஜ் இணையும் படம்; தயாரிக்கும் நிறுவனம் எது? அறிவிப்பு எப்போது?

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் பேச்சு வைரலாகியிருக்கிறது. ஜெயிலரில் ரஜினி “லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.” என்று சொல்லி, ரஜினி படத்தை இயக்குகிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்த படத்தை தயாரிக்கப்போவது யார் என்பது குறித்து கோலிவுட்டில் விசாரித்ததில் … Read more

உம்மன் சாண்டியின் மறைவு எனக்கு பெர்சனல் இழப்பு ; சோகத்தில் குஞ்சாக்கோ போபன்

கேரளாவின் முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் எய்திய நிலையில் அவரது உடல் அங்கிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது உடலை பெற்று அவரது இல்லத்திற்கு கொண்டு செல்வதற்காக வந்திருந்தவர்களில் நடிகர் குஞ்சாக்கோ போபனும் ஒருவர். இந்த நிலையில் தற்போது உம்மன் சாண்டியின் மறைவு குறித்து குஞ்சாக்கோ போபன் கூறும்போது, “அவரது மறைவு எனக்கு பெர்சனல் ஆக மிகப்பெரிய … Read more

சேலம் மக்களே ரெடியா.. ‘ஓ சொல்றியா’ ஆண்ட்ரியா பாட்டுப் பாட வராங்க.. ஜோஷ் உடன் இணைந்து செம சம்பவம்!

சென்னை: ஜோஷ் செயலியுடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா நடத்தும் இசைக் கச்சேரி நிகழ்ச்சி வரும் ஜூலை 22ம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. வெளிநாட்டு இசைக் கலைஞர்களை போல தற்போது கோலிவுட் பிரபலங்களும் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா மற்றும் சிம்பு இணைந்து மலேசியாவில் கச்சேரி நடத்தி ஒரு பக்கம் கலக்கி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஜோனிடா காந்தி என பலரும் லைவ் இசை … Read more

Samantha: உடல்நலம் சரியாகணும்: பொற்கோவிலை அடுத்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்ற சமந்தா

உடல் நலத்தில் கவனம் செலுத்த பிரேக் எடுத்துள்ள சமந்தா கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறார். ​சமந்தா​தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு இருக்கிறது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே தொடர்ந்து படங்கள், வெப்தொடர் என பிசியாக நடித்து வந்தார். இந்நிலையில் உடல்நலனில் கவனம் செலுத்த, உயர் சிகிச்சை பெற, ஓய்வு எடுக்க நடிப்பில் இருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கிறார் சமந்தா.உதயநிதி ஸ்டாலின்​உதயநிதியை … Read more