ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா?

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி வரும் தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில ஆண்டுகள் முன்பே வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் … Read more

Thalaivar 170 – தலைவர் 170 – 30 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் அமிதாப்.. வேற லெவல் அப்டேட்

சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் இப்போதும் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக அவரது சம்பளமும் கணிசமாக குறைந்துள்ளது என்று கோலிவுட்டில் பேசப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி கட்டாயமாக ஹிட் கொடுக்க வேண்டிய முனைப்பிலும் அவர் இருக்கிறார். ஜெயிலர் ரஜினி: … Read more

நயன் – விக்கிக்கு வாழ்த்து சொன்ன இரட்டை குழந்தைகள்: இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஜோடியாக திகழ்பவர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன். இந்த ஜோடிகள் அண்மையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று தங்களின் முதல் வருட திருமண நாளை கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா தங்களின் முதல் வருட திருமண நாளை விமர்சையாக கொண்டாடினார்கள். திருமண நாளை முன்னிட்டு … Read more

ரஜினி – த.செ.ஞானவேல் படத்தில் இணையும் இந்தி சூப்பர் ஸ்டார்; 32 ஆண்டுகளுக்குப் பிறகு அமையும் கூட்டணி!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் `ஜெயிலர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் யார் என்பதைப் பற்றியான தகவல்களும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் படத்தின் ஒரு முக்கியமான … Read more

காதலியை கரம்பிடிக்கும் நரேஷ்

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் கனா காணும் காலங்கள் வெப் தொடரின் இரண்டாவது சீசன் அண்மையில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது. பல புதிய நடிகர்கள் அறிமுகமாகியுள்ள இந்த சீசனில், மதன் என்ற கதாபாத்திரத்தில் நரேஷ் என்ட்ரி கொடுத்துள்ளார். சில எபிசோடுகளிலேயே இவருக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. நரேஷ், மாதவி என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், தற்போது இருவருக்கும் கோலகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடிக்கும் பல நட்சத்திரங்கள் … Read more

Maaveeran – மாவீரன் புதிய அப்டேட்.. சிவா ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: Maaveeran (மாவீரன்) சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மாவீரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அனூதீப் இயக்கத்தில் வெளியான பிரின்ஸ் படம் கொடுத்த மாபெரும் அடிக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்துவிட்டு பிரின்ஸ் கொடுத்த தோல்வியை எஸ்கே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாவீரன் மாபெரும் வெற்றி பெறும் … Read more

Vijay: அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. விஜய்யின் திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை.!

நடிகர் விஜய் தனது 49 வது பிறந்தநாளை வரும் ஜுன் 22 ஆம் தேதி கொண்டாட தயாராகவுள்ளார். அவரின் பிறந்தநாளில் ரசிகர்கள் அன்னாதானம், இரத்ததானம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வது வழக்கம். மற்றொரு பக்கம் அவர் நடித்து வரும் படம் அல்லது நடிக்க போகும் படங்கள் குறித்த அப்டேட்களை சம்பந்தப்பட்ட படக்குழு வெளியிடும். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் அந்த வகையில் வரும் … Read more

Takkar Review: ஆக்‌ஷன் அவதாரத்தில் சித்தார்த்; டாப் டக்கர் ரேசா, சோதிக்க வைக்கும் பயணமா?

பணக்கார வாழ்க்கையே நிம்மதியும் சந்தோஷமும் தரும் என ஓடும் இளைஞனும், அதீத பணத்தால் விரக்தியுடன் வாழும் இளைஞியும் சந்தித்துக்கொண்டால் அவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழும் என்பதே இந்த `டக்கர்’. அம்மா மற்றும் பள்ளி செல்லும் தங்கையுடன் கிராமத்தில் வறுமையில் வாழும் குணசேகரன் (சித்தார்த்), பணக்காரன் ஆகியே தீருவேன் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வந்து, பல வேலைகள் பார்க்கிறார். அவரின் தன்மானம் அவரின் வேலைக்கும் லட்சியத்திற்கும் தடையாக இருக்கிறது. வறுமை கழுத்தைப் பிடிக்க, தற்கொலை முடிவை எடுக்கிறார். இச்சூழலில், … Read more

சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன்

கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் அறிமுகமான மூன்று நடிகைகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் இவரின் நடிப்பில் வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் தில்லு ஸ்கொயர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் … Read more

Vadivelu – வடிவேலு அதைக்கூட செய்யவில்லை.. புகார் வாசிக்கும் அடுத்த பிரபலம்

சென்னை: Vadivelu (வடிவேலு) சந்தானம் செய்ததைக்கூட வடிவேலு செய்யவில்லை என பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை அடையாளம் தெரியாமல் சிதைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு. வடிவேலுவின் … Read more