நடிகர் பாலாவுக்கு கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

2003ல் வெளிவந்த 'அன்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. தொடர்ந்து 'காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2006ல் 'கலாபம்' என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து கடந்த 15 வருடங்களாக பல மலையைளப் படங்களில் நடித்துள்ளார். கேரளாவிலேயே செட்டிலாகிவிட்டார். சிவா இயக்கி அஜித் நடித்து வெளிவந்த 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார் பாலா. சிவா … Read more

போலி நியமன ஆணை மூலமாக லட்சக்கணக்கில் மோசடி: நடிகை அல்போன்சா தங்கை கைது

சென்னை கேளம்பாக்கத்தில் வசித்துவருபவர் பிரபல நடிகை அல்போன்சாவின் தங்கை ஷோபா (46). இவர் வளசரவாக்கத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன்மூலம் மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்ய ஆட்கள் தேவை என சில மாதங்களுக்கு முன்பு விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து பலரும் வேலைத்தேடி ஷோபாவின் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இன்டர்வியூ நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து ஷோபா சுமார் ரூ.74 லட்சம் பணம் பெற்றதாக … Read more

பரிதாப நிலைக்கு ஆளாகும் சில தயாரிப்பாளர்கள்: சினிமா ஒரு சூதாட்டமா?

சினிமா என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்பவர்கள் உண்டு. ஒரு முறை அதன் உள்ளே வந்தவர்கள் மீண்டும் வெளியில் போவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்த தயாரிப்பாளர்கள் கூட ஒரு சில தோல்விகளால் சினிமாவே வேண்டாமென ஒதுங்கிய வரலாறும் இங்குண்டு. பழம் பெரும் நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் கூட சினிமா தயாரிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டது. தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் சுத்தமாக படங்களைத் தயாரிப்பதே இல்லை. கவிதாலயா, சூப்பர்குட் … Read more

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது!

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ள லைகா நிறுவனம், ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெறுவதாகவும், அங்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது தங்கையாக நடிக்கும் ஜீவிதா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்று முதல் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் … Read more

பிரின்ஸ் படத்தின் தோல்வி எதிரொலி; சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்

தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்குமார் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதற்கிடையே தர்பார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தை தான் இயக்குவதோடு தயாரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் கடைசியாக தான் … Read more

இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்த காடு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் பத்து தல. இப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாகிறது. நடிகர் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

NTR, Dhanush: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் – என்டிஆர்..?: வெளியான உண்மை தகவல்.!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ள இயக்குனர்களின் எண்ணிக்கை குறைவு. அந்த வரிசையில் இருப்பவர் வெற்றிமாறன். தனது தரமான படைப்புகள் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தங்களின் பேவரைட் ஹீரோக்கள் இவருடன் ஒரு படமாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என பலரும் எதிர்பார்ப்பது வழக்கம். இந்நிலையில் வெற்றிமாறன் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் படம் ஒன்று இயக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக ‘அசுரன்’ படம் வெளியானது. எப்போது ரசிகர்கள் விரும்பும் … Read more

தியேட்டர்களில் வெளியாகுமா 'சார்பட்டா பரம்பரை 2'?

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1975ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக அப்படம் வெளிவந்தது. நேற்று திடீரென 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் என்ற அறிவிப்பு வெளியானது. இப்படி ஒரு அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். … Read more

Pattiyal Sekar: தயாரிப்பாளர் பட்டியல் சேகர் திடீர் மரணம்: சோகத்தில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விளங்கியவர் பட்டியல் சேகர். இவரது மகன்கள் விஷ்ணுவர்தன் இயக்குனரகாவும், கிருஷ்ணா நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 63 வயதான பட்டியல் சேகர் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டியல்’ படத்தை தயாரித்தவர் சேகர். இந்தப்படத்தை தயாரித்ததால் இவர் பட்டியல் சேகர் என அழைக்கப்பட்டு வந்தார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணாவின் தந்தையாவார். ‘பட்டியல்’ படம் தவிர கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கழுகு’ மற்றும் அலிபாபா … Read more

எனது கடைசி படம் இதுவாக இருக்கலாம்: கமலிடம் சொன்ன பாரதிராஜா

நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் இயக்கி உள்ள பட 'கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். கமல்ஹாசன் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான், தயாரிப்பாளர் டி.துரை வீரசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியல் கமல், தங்கர் பச்சானிடம் பேசும்போது “தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. … Read more