Kovai Guna: நகைச்சுவை நடிகர் கோவை குணா திடீர் மரணம்: திரைத்துறையில் மற்றுமொரு சோகம்.!
அண்மையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சோகம் குறைவதற்கு முன்பாகவே பிரபல மிமிக்ரி கலைஞரும், நகைச்சுவை நடிகருமான கோவை குணா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் ஒளிப்பரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பல கலைஞர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த லிஸ்டில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மிமிக்ரி கலைஞரான கோவை குணா. … Read more