LEO: 'லியோ' படம் குறித்து மரண மாஸ் தகவல் சொன்ன அர்ஜுன்: தரமான சம்பவம் கன்பார்ம்.!

விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படம் குறித்த அறிவ்ப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர். கடைசியாக வெளியான ‘வாரிசு’ படத்தில் பேமிலி சென்டிமெண்டில் கலக்கிய விஜய், தற்போது லோகேஷ் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தளபதி 67 என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப்படத்திற்கு ‘லியோ’ என தலைப்பு வைக்கப்பட்ட டைட்டில் வீடியோ அண்மையில் … Read more

இது யாரோ ஒருவரின் கற்பனை – திருமண நிச்சயம் குறித்து பிரபாஸ் விளக்கம்

பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதி புரூஷ்' படத்தில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சைப் அலிகான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை கிர்த்தி மறுத்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் விரைவில் நடைபெறவிருக்கிறது என … Read more

உட்காருவதற்கு நாற்காலி கொடுங்கள்: டிடி உருக்கமான வேண்டுகோள்

பொது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் மணிக்கணக்கில் நின்று கொண்டு பேசுவார்கள். குறிப்பாக திரைப்பட விருது விழாக்கள், பாராட்டு விழாக்களில் 3 முதல் 4 மணி நேரம்கூட நின்று கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நாற்காலி கொடுங்கள் என்று நட்சத்திர தொகுப்பாளின் டிடி என்று அழைக்கப்படுகிற திவ்யதர்ஷினி கேட்டிருக்கிறார். சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட டிடி அதனை தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டிருந்தார். ஊன்று கோலுடன் நடப்பதாகவும் சொல்லியிருந்தார். இந்த நிலையில் தனியார் கல்லூரியில் … Read more

மலையாள இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பளித்த தமிழ் தயாரிப்பாளர்

மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி இருந்த படம் ரன் பேபி ரன். சமீபத்தில் வெளியான இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் ஜியென் கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்று தயாரிப்பாளர் லக்ஷ்மண்குமார் அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் ஆர்ஜே பாலாஜிதான் … Read more

ருத்ரன் படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்ட 60 வருடத்திற்கு முந்தைய ஹிட் பாடல்

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன். விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வலம்வந்த இவர் ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறி தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இருந்து பாடாத பாட்டெல்லாம் … Read more

பிச்சைக்காரன் 2 : முதல் 4 நிமிட காட்சி வெளியானது

நடிகரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி சற்று வித்தியாசமானவர். தான் நடிக்கும் படங்களின் கதையை வெளிப்படையாக கூறுவார். அதோடு பட வெளியீட்டுக்கு முன்பே படத்தின் பல நிமிட காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்டு காட்டுவார். ஆனால் இந்த முறை அவர் நடித்து வரும் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் முதல் 4 நிமிட(3:45 நிமிடம்) காட்சிகளை பொதுமக்களின் பார்வைக்காக இன்று (பிப்.10) மாலை 5 மணிக்கு வெளியிட்டார். கடந்த 2016ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் … Read more

லியோ அறிவிப்பு பாடல் உருவான விதத்தை வெளியிட்ட அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூரலிகான் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டதிலிருந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதோடு, இந்த லியோ படம் எந்த மாதிரியான கதையில் உருவாகி வருகிறது என்பதையும் ரசிகர்கள் உற்று நோக்கத் தொடங்கி விட்டார்கள். சமீபத்தில் விக்ரம் … Read more

கஜோலின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும் : கிச்சா சுதீப்

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் நடித்த விக்ராந்த் ரோனா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அந்த படத்தின் ஹீரோ கிச்சா சுதீப், “ஹிந்தி தேசிய மொழி கிடையாது.. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்திய படங்களை எடுக்கிறார்கள்.. பிற மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றி காண்பதில்லை” என்று பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறும்போது, “இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால் பின் எதற்காக … Read more

குடும்பத்துடன் சுற்றுலாவில் குஷ்பு

தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் குஷ்பு, சுந்தர் சி முக்கியமானவர். சினிமா, டிவி, அரசியல் என பல்வேறு தளங்களில் பயணித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்பவர் குஷ்பு. தன்னைப் பற்றியும் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பார். தற்போது குடும்பத்தினருடன் துபாயில் உள்ள பிரபலமான ரிசார்ட் ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “முயற்சியிருந்தால் எதற்கும் ஒரு வழி உண்டு. உங்களது பிஸியான நேரத்திலும் சில தருணங்களை … Read more

ஊழியரிடம் தன் காலணிகளை கையில் எடுத்துவர கூறினாரா அமைச்சர் ரோஜா?வைரல் வீடியோவுக்கு விளக்கம்

நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. 1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில், அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். வழக்கமாக தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்தப் … Read more