“சப்தம்” படத்தில் இணைந்த லைலா

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லைலா. திருமணம், குழந்தை பிறப்பு என வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு சென்றதால் சினிமாவை விட்டு சிலகாலம் விலகினார். நீண்ட இடைவெளிக்கு பின் கார்த்தியின் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின் வதந்தி வெப்சீரிஸில் நடித்தார். இப்போது ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி … Read more

சென்னை அருகே 'இந்தியன் 2' படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது சென்னை அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள டச்சு கோட்டையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்று நடிக்கும் சண்டைக் காட்சிகள் அங்கு படமாகி வருகிறது. நேற்று அங்கு படப்பிடிப்பு நடப்பதைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்தனர். படப்பிடிப்பு இடைவெளியில் கமல்ஹாசன் வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்தார். பலரும் எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. 'இந்தியன் … Read more

துப்பாக்கி படத்தைதான் என் மகனுக்கு முதன்முதலில் காட்டுவேன் : காஜல் அகர்வால்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் இளமைக்காலம் மற்றும் முதுமை காலம் என இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள கோஸ்டி என்ற படம் வருகிற 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சலும் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு தற்போது நீல் என்ற மகன் இருக்கிறார். அவ்வப்போது தனது மகனுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை, … Read more

STR48: கமலுக்காக தன் கொள்கையை தளர்த்த சிம்பு..ஷாக்கான கோலிவுட்..!

தமிழ் சினிமாவில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நடிகர் தான் சிம்பு. இவரை சுற்றி எப்போதும் ஒரு வித பரபரப்பும் சர்ச்சையும் இருந்து வரும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிம்பு எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகின்றார். உடல் எடை கூடி இருந்த சிம்பு இனி அவ்வளவுதான் என சிலர் விமர்சிக்க, எனக்கு எண்டே கிடையாது என மாநாடு படத்தின் மூலம் செம கம்பாக் கொடுத்தார் சிம்பு. தன் உடல் … Read more

ஆபரேஷன் அரபைமா : போர் கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்

முன்னாள் கடற்பரை வீரர் பிராஷ் தயாரித்து, இயக்கி உள்ள படம் ஆபரேஷன் அரபைமா. ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் பிராஷ் கூறியதாவது : போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா வாகத்தான் இருக்கும். இப்படத்தை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. ஆனால், அந்த சவால்களையும் செய்துள்ளோம். கடலில் ஒரு … Read more

STR 48: காட்டுப்பசிக்கு முரட்டு விருந்து.. வெளியான தாறுமாறு அறிவிப்பு.!

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிகளை தொடர்ந்து சிம்பு எந்தவொரு படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இதனால் சிம்புவை வைத்து யார் படம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதில் மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்டோர்கள் பெயர்கள் அடிப்பட்டது. இந்நிலையில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிரடி அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிம்பு உடல் எடையை அதிகமாக ட்ரோல் செய்யப்பட நிலையில் ‘மாநாடு’ படத்தின் மூலம் வேறலெவல் கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு … Read more

விஜயகாந்துக்கு பிரமாண்ட பாராட்டு விழா – விஷால் திட்டம்

விஷால் தற்போது நடித்து வரும் புதிய படம் 'மார்க் ஆண்டனி'. இதில் ரிது வர்மா, அபிநயா, எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று சைதாப்பேட்டை அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது : சினிமாவில் இயக்குனராகும் கனவில் வந்து நடிகன் ஆகி மீண்டும் இயக்குனராகி இருக்கிறேன். அதேபோல நடிகனாகும் கனவில் வந்து இயக்குனராகி மீண்டும் நடிகராகியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நாங்கள் இருவரும் இணைந்து … Read more

AK 62, Ajith: 'ஏகே 62' பட லுக்கா.? வெறித்தனமா இருக்கே: தீயாய் பரவும் அஜித்தின் புகைப்படம்.!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ‘ஏகே 62’ படத்திற்கான லுக்காக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஏகே 62அஜித்தின் ‘ஏகே 62’ அறிவிப்பு எப்போதும் வெளியாகும் என ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போது வரை இந்தப்படத்தின் இயக்குனர் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் ரீசன்ட் லுக் ‘ஏகே 62’ படத்திற்கானதா? … Read more

ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்த நக்மா

1990களில் பிசியாக இருந்தவர் நடிகை நக்மா. தமிழில் காதலன் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்தார். தற்போது நடிப்பை விட்டு விலகி இருக்கும் நக்மா காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார். மும்பையில் வசித்து வரும் நக்மாவுக்கு சமீபத்தில் போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த லிங்கை நடிகை நக்மா கிளிக் செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி … Read more

Khushbu Sundar:நான் வெட்கப்படல, தப்பு செஞ்ச அவர் தான் வெட்கப்படணும்: குஷ்பு

8 வயதில் தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்புவின் லேட்டஸ்ட் பேட்டியை பார்த்த ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். ​குஷ்பு​நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தனக்கு 8 வயது இருந்தபோது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் துவங்கினார் என்றார் குஷ்பு. 15 வயது வரை அது குறித்து யாரிடமும் கூறாமல் பயந்து இருந்த குஷ்பு ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தந்தையை எதிர்த்திருக்கிறார். ​பதில்​தந்தையே தனக்கு … Read more