ரிலீஸிற்கு தயாராகும் ‛சூர்ப்பனகை'

'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், ராஜ் சேகர் வர்மா தயாரிப்பில், ரெஜினா கசாண்ட்ரா நடித்த 'சூர்ப்பனகை' படத்தை எஸ்பி சினிமாஸ் வாங்கியுள்ளது. பேண்டசி – த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட 'சூர்ப்பனகை' 1920கள் மற்றும் தற்போதைய காலம் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். இதில் ரெஜினாவுடன் அக்ஷரா கவுடா, ஜேபி, மன்சூர் அலி கான், ஜீவா ரவி, மைக்கேல், கௌஷிக், யோகி, ரவிராஜா மற்றும் பலர் … Read more

காதல் கணவரை பிரிந்த துல்கரின் முதல் பட நாயகி

மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் வாரிசாக செகண்ட் ஷோ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் துல்கர் சல்மான். ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இந்த படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படத்தில் தான் மலையாள நடிகை கௌதமி நாயரும் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த கௌதமி நாயர், கடந்த 2017ல் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதே அவர்கள் இருவருக்குமான வயது வித்தியாசம் பரபரப்பாக பேசப்பட்டது. … Read more

பணிக்கு அனுப்பிய பெண்ணை துபாயில் தவிக்க விட்டதாக சர்ச்சையில் சிக்கிய நவாசுதீன் சித்திக்

பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தவர் இவர்தான். இவரும் இவரது மனைவி ஆலியாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து குறித்த ஒரு வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் துபாயில் படிக்கும் தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக தன் தரப்பிலிருந்து சப்னா என்கிற இளம் பெண்ணை வேலைக்காக அனுப்பி வைத்தார் நவாசுதீன் சித்திக். ஆனால் தனக்கு சம்பளம் எதுவும் … Read more

மோகன்லாலின் ஆராட்டு பட தோல்விக்கு நானே முழு காரணம் : இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் பி.உன்னிகிருஷ்ணன். கடந்த பத்து வருடங்களில் தொடர்ந்து மோகன்லால் படங்களை இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர் விஷால், ஹன்சிகா, ராசி கன்னா ஆகியோரை தான் இயக்கிய வில்லன் படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகம் செய்தவரும் கூட. கடந்த வருடம் மோகன்லால் வைத்து இவர் இயக்கிய ஆராட்டு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி, … Read more

‛வடக்கன்' படத்திற்கு இசையமைக்கும் கர்நாடக இசைகலைஞர் எஸ்ஜே ஜனனி

பிரபல கர்நாடக இசைக்கலைஞரான எஸ்ஜே ஜனனி ‛வடக்கன்' என்ற படத்திற்கு இசையமைக்கிறார். சிறு வயதில் இருந்தே இசைப்பயிற்சி பெற்று இளம் வயதிலேயே மேடை கச்சேரிகளில் பாடியவர் எஸ்ஜே ஜனனி. கர்நாடக இசை, இந்துஸ்தானி, உள்ளிட்ட இசைகளில் இவர் கற்றுத்தேர்ந்தவர். பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளில் பாடி உள்ளார். 'புதிய உலகம் மலரட்டுமே' என்ற பாடலுக்கு 'உலக அமைதிப் பாடல்' என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் மத்திய … Read more

கங்கனாவின் பாராட்டுக்களை புறக்கணித்த ஜாவேத் அக்தர்

பிரபல பாலிவுட் பாடகர் ஜாவேத் அக்தர், சமீபத்தில் பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பாடகருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, 26/11-ல் மும்பை மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் போக்கை கடுமையாக கண்டித்து பேசினார். அதுமட்டுமல்ல மறைந்த பாகிஸ்தான் நடிகர்களான மெஹ்தி ஹாசன் மற்றும் நஷரத் படே அலிகான் ஆகியோருக்காக இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்தியாவின் இசைக்குயிலான மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சி கூட நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். … Read more

Rajinikanth:என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார்: ஆணித்தரமாக நிரூபித்த ரஜினிகாந்த்..!

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ படம் படைத்துள்ள புதிய சாதனையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினிதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இத்தனை ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பெற்று அதனை தக்க வைத்துள்ளார் ரஜினிகாந்த். இவரின் பட ரிலீசை திருவிழாவாக கொண்டாட ஒரு ரசிகர்கள் பெருங்கூட்டமே உள்ளது. இந்நிலையில் ரஜினியின் படம் ஒன்று இமாலய சாதனை படைத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர்ரஜினி தற்போது … Read more

கண்ணீரில் முடிந்த கனவு உலகின் காமெடி நடிகர்கள் வாழ்க்கை!

நகைச்சுவை என்ற சொல்லுக்கு கிண்டல், கேலி, நய்யாண்டி, நக்கல், விகடம், பகடி என சொற்கள் பல உண்டு. அப்படிப்பட்ட நகைச்சுவைக்கு சொல்லாடலும், கால நேர குறிப்பறிதலும் அவசியம். பேசும்படம் தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை பல நகைச்சுவை கலைஞர்களை தந்த, தந்து கொண்டிருக்கின்ற கலையுலகம் தமிழ் சினிமா. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தொடங்கி இன்றைய யோகி பாபு வரை அவரவர் தனித்தன்மையுடன் சொல்லாடல், உடல் மொழியோடு, ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து நல்ல நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட நகைச்சுவை … Read more

Sai Pallavi: விஜய், அஜித் பட வாய்ப்பை உதறி தள்ளிய சாய் பல்லவி: அதிர வைக்கும் காரணம்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்கள் விஜய், அஜித். திரைத்துறையில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும், அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் கொண்டபவராகவும் இவர்கள் திகழ்கின்றனர். புதிதாக சினிமாவுக்கு வரும் நடிகைகள் அனைவரும் ஒரு படமாவது இவர்களுடன் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் விஜய், அஜித் படங்களை ரிஜக்ட் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த படம் ‘பிரேமம்’. இந்தப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த … Read more

சந்திரமுகி 2வில் இணைந்த மகிமா நம்பியார்

ரஜினி நடித்த சந்திரமுகி படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்ததை தொடர்ந்து, அவர் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க பி.வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ராதிகா, வடிவேலு, ரவிமரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா … Read more