திருக்கடையூர் கோயிலில் காமெடி நடிகர் செந்திலுக்கு பீமரத சாந்தி
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான செந்திலுக்கு 72வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் கோயிலில் பீமரத சாந்தி நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி … Read more